துரை வைகோவிற்கு தரப்பட்ட பொறுப்பு! இது கண்டிப்பாக வாரிசு அரசியல் இல்லை! – வைகோ!

துரை வைகோவிற்கு தரப்பட்ட பொறுப்பு! இது கண்டிப்பாக வாரிசு அரசியல் இல்லை! – வைகோ!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மகன் துரை வைகோவிற்கு இப்போது அக்கட்சியில் பதவி வழங்குவது தொடர்பாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த நிலையில் துரை வையாபுரி கட்சியில் பதவி வழங்கப்படுவதாக தற்போது வைகோ அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வைகோ கூறுகையில், ம.தி.மு.கவில் துரை வைகோவுக்கு தலைமை கழக செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தி துரை வைகோவிற்கு பதவி வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மொத்தமாக பதிவான 108 வாக்குகளில் துரை வைகோவுக்கு ஆதரவாக 104 வாக்குகள் பதிவாகியுள்ளது. இது வாரிசு அரசியல் கண்டிப்பாக இல்லை. தொண்டர்கள் அவர்களின் விருப்பப்படியே அவருக்கு பதவி வழங்கப்பட்டது. கட்சியின் பொதுச் செயலாளரை பொது குழுதான் தேர்வு செய்யும் என்றும் கூறினார்.

Leave a Comment