இன்னும்கூட அந்தப் பழக்கத்தை மாற்றாத ரஜினி.!! குஷ்பு வெளியிட்ட தகவல்.!!

0
256

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த.  இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் நடிகர் ரஜினியுடன், மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  அண்ணாத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வீடியோ வெளியாகி  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனையடுத்து வெளியான அண்ணாத்த திரைப்படத்தின் முதல் பாடல் மற்றும் இரண்டாவது டூயட் பாடல்  வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் கடந்த அக்டோபர் 14ஆம் தேதி வெளியான அண்ணாத்த திரைப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அண்ணாத்த திரைப்படத்திற்கு யுஏ சான்றிதழை சென்சார் போர்டு வழங்கியுள்ளது. இந்த திரைப்படம் வரும் நவம்பர் 4-ம் தேதி  தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இன்னும்கூட அந்தப் பழக்கத்தை மாற்றாத ரஜினி.!! குஷ்பு வெளியிட்ட தகவல்.!!

இந்நிலையில் இப்படம் குறித்து சமீபத்தில் நடிகை குஷ்பு பேசியுள்ளார். அதில், ரஜினி தன்னுடன் அண்ணாமலை படத்தில் நடிக்கும் போது எப்படி இருந்தாரோ, அப்படியேதான் இன்னமும் இருக்கிறார். அவர் கொஞ்சம் கூட மாறவே இல்லை என்றார்.

மேலும், படப்பிடிப்புக்கு சற்று தாமதமாக வந்தாலும் அனைவரிடமும் மன்னிப்பு கேட்பார். இப்போதும் அந்த பழக்கத்தை கொண்டுள்ளார் என கூறியுள்ளார். மேலும், நீங்கள் படையப்பா, அருணாச்சலம் படத்தில் பார்த்த அதே ரஜினியை பார்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Previous articleநாளுக்கு நாள் அதிகரிக்கும் அராஜகம்! தேசிய மகளிர் அணி வீராங்கனையின் தலையை வெட்டிய தலீபான்கள்!
Next articleதுரை வைகோவிற்கு தரப்பட்ட பொறுப்பு! இது கண்டிப்பாக வாரிசு அரசியல் இல்லை! – வைகோ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here