ஜெகதீசனின் பொறுப்பான ஆட்டம்! ரயில்வேஸ் அணியை வீழ்த்திய தமிழ்நாடு!
தற்பொழுது நடைபெற்று வரும் ரஞ்சித் கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழக கிரிக்கெட் அணியை சேர்ந்த ஜெகதீசன் அவர்களின் பொறுப்பான ஆட்டத்தாலும் பந்துவீச்சாளர்களின் அசத்தலான பந்துவீச்சாலும் இரயில்வேஸ் அணியை தமிழக கிரிக்கெட் அணி 129 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.
கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி இரயில்வேஸ் மற்றும் தமிழ்நாடு ஆகிய அணிகளுக்கு இடையேயான ரஞ்சித் கோப்பை போட்டி தொடங்கியது. இந்த போட்டி கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமகிருஷ்ணா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தமிழக அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் களமிறங்கிய தமிழ்நாடு அணியில் சிறப்பாக விளையாடிய நாரயண் ஜெகதீசன் அவர்கள் இருவரையும் அடித்து 245 ரன்கள் சேர்த்தார். பூபதி குமார் அவர்கள் அரைசதம் அடித்து 67 ரன்களும், கேப்டன் சாய் கிஷோர் அரைசதம் அடித்து 59 ரன்களும் சேர்த்தனர்.
இதையடுத்து களமிறங்கிய இரயில்வேஸ் அணி முதல் இன்னிங்சில் தமிழக அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் இரயில்வேஸ் அணியில் பிரதம் சிங் அவர்கள் அரைசதம் அடித்து 92 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து பாலோ ஆன் பெற்ற இரயில்வேஸ் அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாவது இன்னிங்சில் தமிழக அணியில் கேப்டன் சாய் கிஷோர் மற்றும் அஜித் ராம் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள் முடியாமல் இரயில்வேஸ் அணி 114 ரன்களுக்கு சுருண்டது.
இதனால் தமிழக அணி கெஞ்சிக் கோப்பை தொடரில் 129 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 7 புள்ளிகளை பெற்றது. சிறப்பாக பேட்டிங் செய்த நாராயண் ஜெகதீசன் அவர்கள் ஆட்டநாயகன் விருதை வென்றார்.