DMK Naam Tamilar Katchi: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கலைஞரை அவதூறாக பேசிய காரணத்திற்காக சீமான் மீது கைது நடவடிக்கை உத்தரவி எஸ் சி எஸ் டி ஆணையம் பிறப்பித்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தன்னை எதிர்த்து பேசும் யாராக இருந்தாலும் அவர்களை சிறைவாசகத்திற்கு அனுப்புவதையே வேலையாக வைத்துள்ளது. குறிப்பாக தங்களுக்கு எதிராக எந்த ஒரு விமர்சனமும் யாரும் வைக்கக் கூடாது என்பதில் அதிகளவு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது நாம் தமிழர் கட்சி சீமான் கலைஞர் குறித்து அவதூறாக பேசியுள்ளார்.
குறிப்பிட்ட சாதியினரை குறிக்கும் சொல்லான சண்டாளன் என்பதை கூறியுள்ளார். இதற்கு பெருமளவு எதிர்ப்பு கிளம்பியதோடு இவர் மீது வழக்கும் தொடுக்கப்பட்டது. தற்பொழுது இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து கலைஞரை சண்டாளன் எனக் கூறியதற்காக சீமான் மீது கைது நடவடிக்கை எடுக்கும்படி எஸ்சி எஸ்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதற்குரிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளது. இதே போல தான் சவுக்கு சங்கரும் திமுகவை எதிர்த்து பேசிய காரணத்தினால் கைது செய்யப்பட்டதாக அரசியல் நிர்வாகிகள் பலரும் ஆளும் கட்சிக்கு எதிராக கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.