அரசு ஊழியர்கள் எடுத்த ரிவெஞ்.. ஆடிப்போன ஸ்டாலின்!! கட்சி நிர்வாகிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!
மக்களவை தேர்தலுக்கான தபால் வாக்கு முடிவுகள் எதிர்பார்த்த அளவில் இல்லாததால் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள முதலமைசார் ஸ்டாலின், அதனை சமாளிக்க பல்வேறு அரசியல் யுக்திகளை கையாண்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடைபெறவுள்ளது.சுமார் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதனிடையே, மக்களவைத் தேர்தலுக்கான தபால் வாக்குகள் செலுத்தும் பணி தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தபால் வாக்குகள் குறித்த முடிவுகள் எதிர்பார்த்த அளவில் இல்லை என்ற தகவல் முதல்வரின் செவிக்கு எட்டியுள்ளது.அரசு ஊழியர்களுக்கு திமுக மீதுள்ள அதிருப்தியான நிலைப்பாடே இதற்கு முக்கிய காரணம் என்ற கருத்து எழுந்துள்ளது.
தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகள் எல்லாம், ஆட்சிக்கு வந்த பிறகு காற்றில் பறக்கவிடப்பட்டதாக அரசு ஊழியர்கள் சார்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நிதி நிலைமையை காரணம் காட்டி அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாமல் இருந்ததால் அதிருப்தியில் இருந்த அரசு ஊழியர்கள் இந்த மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிக்கொணர்ந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
கடந்த 2019 ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 39க்கு 38 இடங்களில் அமோக வெற்றி பெற்ற திமுக, இந்த முறை அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று தீவிரமாக போராடி வருகிறது.
கடந்த முறை எதிர்க்கட்சியாக இருத்தபோது கிடைத்த வெற்றி, தற்போது கிட்டாவிடில், திமுக ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தியான எண்ணமும் , முகச்சுளிப்பும் ஏற்படும் என்ற அச்சம் திமுகவினர் மத்தியில் நிலவி வருகிறது.
இது நீடிக்கும்பட்சத்தில், வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் இது எரொலிக்க வாய்ப்புள்ளதால், கடைசி கட்ட பிரச்சாரத்தை தீவிரப்படுத்த , மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் வாக்களிக்காத அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாக்குகளை தக்க வைக்கும் பொருட்டு, பிரச்சாரத்தின் போது வாக்குறுதிகளை அள்ளித்தெளிக்க திமுகவினர் முடிவு செய்துள்ளனர்.
வாக்குகளை அள்ளும் வகையில், வரவிருக்கும் அறிவுப்புகளை தெரிந்த கொள்ள மக்கள் மட்டுமின்றி சக அரசியல் கட்சியினரிடமும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.