உரிமை மீட்பு பேரணி.. ராமதாஸுக்கு எண்டு கார்டு போட்ட அன்புமணி!!

0
22
Rights recovery rally.. Anbumani put eight cards to ramadoss!!
Rights recovery rally.. Anbumani put eight cards to ramadoss!!

PMK: அன்புமணி மற்றும் ராமதாஸ் என இருவருக்கும் இடையே நாளுக்கு நாள் உட்கட்சி மோதல் ஆனது அதிகரித்து வருகிறது குறிப்பாக தலைவர் பதவி யாருக்கு என்பதுதான் எந்தன் போட்டியே உள்ளது. அந்த வகையில் ராமதாஸ் இரு தினங்களுக்கு முன்பு வரப்போகும் சட்டமன்ற தேர்தல் வரை தலைவராக நான் தான் இருப்பேன். அதன் பின் அனைத்து பொறுப்புகளையும் அன்புமணி ஏற்றுக்கொள்ளட்டும் எனக் கூறினார்.

அவ்வாறு கூறிய அடுத்த நாளை சாகும் வரை நான் தான் தலைவர் அதற்காக வனவாசம் செல்லவில்லை செயல் தலைவராக செயல்பட்டு நான் சொல்வதை கேட்டால் போதும் எனக்கு உரியதோடு அன்புமணியை பார்த்தாலே பிபி எகர்கிறது என க் கூறினார். இப்படி ராமதாஸ் ஒரு பக்கம் தனது நிர்வாக தலைமையை காட்டி வரும் பட்சத்தில் அதனை விட்டுக் கொடுக்க மனம் இல்லாமல் அன்புமணி மற்றொரு பக்கம் அப்பாவுக்கு எதிராக பல வேலைகளை செய்து வருகிறார்.

அந்த வகையில் ராமதாஸ் பிறந்தநாளன்று திமுகவை கண்டிக்கும் வகையில் மக்கள் உரிமை மீட்பு பேரணி நடத்த உள்ளார். பாமகவிற்கு அதிக ஆதரவுள்ள விழுப்புரம் கடலூர் தர்மபுரி உள்ளிட்ட இடங்களில் 100 நாட்களுக்கு நடைபெறும் என்று கூறியுள்ளார். இந்தப் பேரணி அழைப்பிதழில் ஒரு இடத்தில் கூட ராமதாஸ் அவர்களின் புகைப்படம் இடம்பெறவில்லை.

மாறாக அன்புமணி புகைப்படம் மட்டுமே உள்ளது. இதனைப் பார்த்த தொண்டர்களுக்கு அதிர்ச்சி கலந்த சந்தேகம் எழுந்துள்ளது. கட்சியை முழுவதையும் அபகரிக்க அன்புமணி முயற்சிப்பது இதன் மூலமே தெரிகிறது என பேசி வருகின்றனர். இப்படி மாறி மாறி ஒருவருக்கொருவர் வெறுப்புணர்வை கக்கும் இந்த செயலால் பாமகவின் மவுஸானது மற்ற கட்சிகளை காட்டிலும் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Previous articleதையல் தெரிந்த பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்; மிஸ் பண்ணிடாதீங்க உடனே விண்ணபியுங்கள்!!
Next articleஇந்த பொருட்களுக்கு இனி ஜிஎஸ்டி இல்லை.. வரப்போகும் பெரிய அறிவிப்பு!! அதிரடி காட்டும் நிர்மலா சீதாராமன்!!