வேளாண்துறை பட்ஜெட்! நெல் விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்!

0
88

தமிழக அரசியல் வரலாற்றில் எப்போதும் இல்லாத விதத்தில் இன்று தமிழக சட்டசபையில் வேளாண்மை துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.இந்த நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தான் பாட்டாளி மக்கள் கட்சியை சுமார் 15 வருட காலமாக போராடி வந்தது. 15 ஆண்டுகாலமாக பலனளிக்காத பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டம் இன்று பலன் அளித்து இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

விவசாயிகளின் இயலாமையையும், ஏழ்மையையும், கருத்தில் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக விவசாயத்துக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று ஆளும் கட்சிகளை சுமார் 15 ஆண்டுகளாக வலியுறுத்தியும்,போராடியும், வந்தது பாமக. அதற்கு இன்று தான் விடிவு காலம் பிறந்திருக்கிறது.தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்றைய தினம் ஆரம்பமானது நேற்று காலை 10 மணி அளவில் தமிழகத்தின் இந்த வருடத்திற்கான நிதிநிலை அறிக்கை மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த சூழ்நிலையில் இன்று முதல் முறையாக வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது 273 பக்கங்களைக் கொண்ட இந்த விவசாயத்திற்கான தனி நிதிநிலை அறிக்கையை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார் வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றிருக்கின்ற முக்கிய அம்சங்களை இங்கு பார்க்கலாம்.

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை 4700லிருந்து 4800 ரூபாயாக உயர்த்தி கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு குவிண்டால் நெல் சன்ன ரகம் 2060 ரூபாயாகவும் சாதாரண ரகம் ரூ 2015இல் கொள்முதல் செய்யப்படும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது நெல்லுக்கான ஆதார விலை உயர்ந்து இருப்பதால் அரசுக்கு கூடுதலாக 99.in முப்பத்தி எட்டு லட்சம் செலவாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.