IPL: ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து வெளியேறி ஆர் சி பி அணியியல் விளையாடபோவதாக தகவல் பரவிவருகிறது
கிரிகெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐ பி எல் ன் மெகா ஏலம் நவம்பர் மாதம் சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ளது. இந்த மெகா ஏலத்திற்கு முன்பு ஒவ்வொரு ஆணியும் தங்கள் அணியில் ஆறு வீரர்களை தக்க வைத்து கொள்ள முடியும். இதற்கிடையே லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியில் உள்ள முக்கிய வீரர் அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுல் ஆர் சி பி அணியில் விளையாட போவதாகவும், ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் டெல்லி அணியில் விளையாட உள்ளதாகவும் தகவல் வெளியாகி வந்தது.
தற்போது உள்ள டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் சென்னை அணியில் விளையாடுவார் என்றும் கூறப்பட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணியின் உரிமையாளருக்கும் ரிஷப் பந்த் கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாக அவர் வெளியேறலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பண்ட் அந்த அணியை விட்டு வெளியேறி ஏலத்திற்கு வந்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அவரை எடுக்க அதிக முயற்சி செய்து வருகிறது.வருகிற அக்டோபர் 31 ம் தேதிக்குள் ஒவ்வொரு அணியும் அவர்கள் அணியில் எந்த வீரர்களை தக்க வைக்க போகிறார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டுகளாக ஆர் சி பி அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்தவர் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஆனால் அவர் கடந்த ஆண்டுடன் ஓய்வு அறிவித்துள்ள நிலையில் அவர்களுக்கு ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை அதனால் ரிஷப் பண்ட் ஏலத்திற்கு வந்தால் ஆர் சி பி அணி அவரை வாங்க முதலாவதாக முன்வரும் என கூறப்படுகிறது.