பிரிட்டன் பிரதமராக தன்னுடைய முதல் அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார் ரிஷி சுனக்!

0
77

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியை சார்ந்த நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். உடனடியாக அவர் தன்னுடைய புதிய அமைச்சரவையை அறிவித்தார். இதில் நிதி அமைச்சராக தற்போது பதவி வகித்து வரும் ஜெர்மி ஹன்ட் அதே பதவியில் தொடர்ந்து இருப்பார் என்று அறிவித்திருக்கிறார். சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்த இந்திய வம்சாவளியான உள்துறை அமைச்சர் சுயல்லா பிரேவர் மேனை மீண்டும் அதே பதவியில் நியமனம் செய்தார்.

அதோடு வெளிவருத்துறை அமைச்சராக ஜேம்ஸ் கிளவர்லி நீடிக்கிறார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் பொதுச்சபையில் ஒவ்வொரு புதன்கிழமையும் பிரதமருடன் கேள்வி நேரம் நடப்பது வழக்கம்.

அப்போது எதிர்க்கட்சியினர் பல்வேறு விவகாரம் தொடர்பாக பிரதமரிடம் கேள்விகளை எழுப்புவார்கள். அதற்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும். இந்த கேள்வி நேர நிகழ்வு நேற்றைய தினமும் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக செல்வதற்கு முன்னதாக புதிய அமைச்சரவை குழுவின் முதல் கூட்டத்தை பிரதமர் ரிஷி சுனக் நேற்று கூட்டினார். அதன் பிறகு புதிய அமைச்சரவை குழுவின் புகைப்படம் வெளியிடப்பட்டது.