பிரபல நடிகையின் கார் மரத்தில் மோதி பயங்கர விபத்து!

பிரபல கன்னட இயக்குனர் ராஜேந்திர சிங் பாபு. இவர் மகள் ரோகினி சிங்.இவர் திரையுலகில் துனியா விஜய் ஜோடியாக கண்டீவீரா என்ற படத்தில் அறிமுகமானார்.

கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம்  மக்களுக்கு பரிச்சயமானார்.அவர் கன்னட நடிகர் ஜக் ஜக்தீஷின் இளைய மகளுக்குப் பிறந்த நாள். இதில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த நடிகை ரிசிகா, முடித்துவிட்டு, பார்ச்சுனர் காரில் பெங்களூருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

காரில், நடிகர் ஜக் ஜக்தீஷின் மற்றொரு மகள் அர்பிதாவும் இருந்தார். காரை அவர்களின்  நண்பர் ஒருவர் ஓட்டி வந்துள்ளார். அதிகாலையில் எலஹங்கா – மாவல்லிபுரா சாலையில் வந்துகொண்டிருந்தபோது, வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்தது. 

இதையடுத்து சாலையோரம் நின்றிருந்த மரத்தில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி முழுவதுமாக சேதமடைந்தது.பிரபல நடிகையின் கார் மரத்தில் மோதி பயங்கர விபத்து!

இந்த விபத்தில் காரில் இருந்த நடிகை ரிசிகா சிங் உட்பட மூன்று பேருமே படுகாயம் அடைந்தனர். பின்னர், அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். 

அப்போது,அவர்களின் கை, கால்களில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்குத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

Leave a Comment