வேலை என்பது மக்களாய் பிறந்த அனைவருக்கும் மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. அவ்வாறு செய்யக்கூடிய வேலையானது அவரவர் மனதிற்கு பிடித்தமான வேலையாகவும், அதனால் நிறைய சம்பளம் கிடைக்கக் கூடியதாகவும், கிடைக்கக்கூடிய வேலை நிரந்தரமாக இருக்க வேண்டும் எனவும் பலவிதமான எதிர்பார்ப்புகள் அனைவருக்கும் உண்டு. ஆண்கள் மட்டும் வேலைக்கு சென்ற காலம் போய் பெண்களும் வேலைக்கு செல்லும் நிலைக்கு வந்துள்ளோம்.
ஒருவருக்கு நல்ல வேலை கிடைத்துள்ளது என்பதை அந்த வேலைக்கான சம்பளத்தை பொறுத்து மட்டும் கூற முடியாது. அதாவது அந்த வேலைக்கான தகுதி நம்மிடம் இருக்கிறதா? அதற்கான படிப்பு நம்மிடம் இருக்கிறதா? என்பதை ஆராய்ந்த பின்னரே அந்த வேலையில் நாம் சேர வேண்டும். அப்பொழுதுதான் அந்த வேலையில் நாம் முழு மனதுடனும், விருப்பத்துடனும் ஆர்வமாக செயல்படுவோம். மேலும் எந்த ஒரு இடையூறும், கவலைகளும் இல்லாமல் அந்த வேலையினை திருப்திகரமாக செய்ய முடியும்.
இப்பொழுது ஒரு வேலையில் நாம் சேர்ந்து விட்டோம். அதற்கான தகுதியும் நம்மிடம் உள்ளது என்கின்ற பொழுது அதில் ஊதியம் சற்று உயர்வாக கிடைக்க வேண்டும் அல்லது இந்த வேலை நிரந்தரமாக நம்மிடம் இருக்க வேண்டும் எனவும் நாம் எண்ணுவோம். அதற்கான தன்னம்பிக்கை நம்மிடம் இருந்தாலும் கூட இறை அருளும் நமக்கு கண்டிப்பாக வேண்டும். நாம் செய்யக்கூடிய வேலையை எப்படி தக்க வைத்துக் கொள்வது? எவ்வாறு சிறப்பாக செய்வது? அரசு வேலையில் சேர வேண்டும் என்ற விருப்பமும், அதற்கான உழைப்பும் இருக்கின்றபொழுது எவ்வாறு அரசு வேலையில் சேர்வது? என்று எண்ணுபவர்கள் ஒரு சிறிய வழிபாட்டினை செய்வதன் மூலம் நினைத்த காரியத்தினை அடைந்திட முடியும்.
ஞானசம்பந்த பெருமான் அருளிய இரண்டு பதிகங்களை நாம் தினமும் நமது பூஜை அறை வழிபாட்டின் போது படித்தால் வேலை சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளும் நீங்கி நன்மை கிடைக்கும் என கூறப்படுகிறது.
1.”வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக”
என தொடங்கக்கூடிய இந்த பதிகமும்,
2.”சிந்திப் பரியன சிந்திப்
பவர்க்குச் சிறந்துசெந்தேன்”
என தொடங்கக்கூடிய இந்த பதிகமும் நாம் தினமும் படிக்கும் பொழுது நமது வேலையில் சிறந்த முன்னேற்றத்தினை காண முடியும். மேலும் நாம் நினைத்த வேலையும் கண்டிப்பாக கிடைக்கும்.
இவைகள் மட்டுமின்றி நமது குலதெய்வம் தான் நாம் முதலில் வழிபடக்கூடிய முக்கியமான தெய்வமாகும். எனவே நமது குலதெய்வம் எதுவோ அதனை நினைத்து, எந்த முறையில் வழிபட வேண்டுமோ அந்த முறையில் தினமும் கண்டிப்பாக வழிபட்டு வரவேண்டும்.
அதன் பிறகு ஆஞ்சநேயர் வழிபாடும் சனீஸ்வரர் பகவான் வழிபாடும் மிகவும் முக்கியம். ஏனென்றால் நினைத்த காரியத்தில் வெற்றியே பெற வேண்டும் என்று அதனையே குறிக்கோளாக வைத்து உழைத்து அதில் வெற்றி கண்டவர் என்றால் ஆஞ்சநேயர் தான். அதேபோன்று சனீஸ்வரர் பகவான் நமது ஜாதகத்தில் நன்றாக இருந்தால் மட்டுமே ஒரு நல்ல வேலை என்பது நமக்கு கிடைக்கும். எனவே இந்த இருவரையும் கண்டிப்பாக தினமும் வழிபட வேண்டும்.
தேய்பிறை அஷ்டமி அன்று காலபைரவரை வழிபடுவதும் நாம் நினைத்த வேலை மற்றும் மன நிம்மதியை தரக்கூடிய வேலையை தரக்கூடிய ஒரு சிறந்த வழியாகும். அதேபோன்று அரச மரத்தின் அடியில் இருக்கக்கூடிய பிள்ளையாரை தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்து, அவரை 11 முறை சுற்றி வருவதன் மூலம் அரசாங்க வேலை வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஒரு நல்ல வழியை காட்டுவார்.