இன்று இரவு தமிழகத்திற்கு ஆந்திர அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.
இன்று இரவு தமிழகத்திற்கு கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 12 டிஎம்சி தண்ணீர் ஆந்திர அரசு, கண்டலேறு அணையிலிருந்து சாய் கங்கை கால்வாயில் திறப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டில் கிட்டத்தட்ட 8 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது..
மேலும் மீதமுள்ள 4 டிஎம்சி தண்ணீரை ஜூலை மாதம் திறக்க வேண்டி இருந்த நிலையில், கண்டலேறு அணையில் நீர் மட்டம் குறைவாக இருந்ததால் தண்ணீர் திறக்கப்படவில்லை.
மேலும் இதனையடுத்து ஆந்திர பொதுப்பணித்துறைக்கு, தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில், 14 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க ஆந்திர அரசு ஒப்புக்கொண்டது .மேலும், அதன்படி இன்று இரவு தமிழகத்திற்கு கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.