சேலம் மாவட்டத்தில் நடந்த விபத்தில் கட்டிட தொழிலாளி மரணம்

Photo of author

By Anand

சேலம் மாவட்டத்தில் நடந்த விபத்தில் கட்டிட தொழிலாளி மரணம்

Anand

Updated on:

சேலம் மாவட்டத்தில் நடந்த விபத்தில் கட்டிட தொழிலாளி மரணம்

சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாபட்டிணத்தை சேர்ந்தவர் சின்ராஜ்.42 வயதுடைய இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.

இவர் நேற்று மதியம் பேளூர் – அயோத்தியாபட்டிணம் சாலையில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த மினி லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியுள்ளார்.

குடிநீர் கேன் ஏற்றி வந்த அந்த மினி லாரியில் மோதிய அவர் தலையில் பலமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து அருகிலுள்ள காரிப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.