சேலம் மாவட்டம், அஸ்தம்பட்டி பகுதி ராமகிருஷ்ணா சாலையில் அமைந்துள்ள சண்முகா காலணியைச் சேர்ந்த 78 வயதான முதியவர் ரங்கராஜன் வீட்டில் 3 நாட்களுக்கு முன்பு, இரவு எட்டு மணி அளவில் நான்கு நபர்கள் ரங்கராஜன் வீட்டு கதவை தட்டினர்.ஏதேனும் உறவினர்களாக இருப்பார்கள் என்று எண்ணி கதவை திறந்த ரங்கராஜனிடம் அந்த நான்கு நண்பர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி பருப்பு வழங்க நிதி திரட்டி வருவதாக கூறி, ஏதேனும் உங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு கேட்டு உள்ளே சென்றனர்.அவர் நிதியை எடுத்துவர திரும்பியபோது அவரின் கழுத்தில் இருந்த 4 பவுன் சங்கிலியை அறுத்துக்கொண்டு அந்த 4 கொள்ளையர்களும் வெளியே நிறுத்தியிருந்த ஆட்டோவில் தப்பித்து ஓடினார்.
இதனையடுத்து அந்த முதியவர் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
காவல்துறையினரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த தெருவில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.அந்த சிசிடிவி காட்சியில் கொள்ளையர்கள் தப்பித்து ஆட்டோவில் ஓடுவது தெளிவாக பதிவாகியிருந்தது.
அந்த காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட போலீசார்கள் அந்த நாலு கொள்ளையர்களும் பொன்னம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கார்த்தி மற்றும் அவரது நண்பர்கள் சேகர், சுகன், கார்த்திகேயன் எனக் கண்டுபிடித்தனர். அவர்களை இன்று கைதும் செய்து அவர்களது வீட்டில் மறைத்து வைத்திருந்த 4 சவரன் நகை மற்றும் ஆட்டோ ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.