ரோபோவை நாய் VS உண்மையான நாய்கள்! இணையத்தில் வைரலாகும் வேடிக்கையான வீடியோ!

0
331
#image_title

ரோபோவை நாய் VS உண்மையான நாய்கள்! இணையத்தில் வைரலாகும் வேடிக்கையான வீடியோ!

இணையத்தில் ரோபோ நாயுடன் உண்மையான நாய்கள் விளையாடும் வீடியோ ஒன்று இணையதளத்தில் மிக வைரலாக பரவி வருகின்றது.

தற்போதைய காலத்தில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு இருக்கின்றது. ஏஐ என்னும் தொழில்நுட்பம் தற்பொழுது அனைத்து துறையிலும் வந்துவிட்டது. அதே போல ரோபோ தொழில்நுட்பமும் தற்பொழுது உலக நாடுகளில் சில பகுதிகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றது.

சமீபத்தில் கூட ஹோட்டல் ஒன்றில் ரோபோ சேவை செய்யும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதே போல தற்பொழுது இணையத்தில் ரோபோ நாயுடன் உண்மையான நாய்கள் விளையாடும் வீடியோ அனைவருடைய கவனத்தையும் பெற்று வருகின்றது.

ஐஐடி கான்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட ரோபோ நாய் காட்சிபடுத்தப்பட்டது. இந்நிலையில் அந்த ரோபோ நாயுடன் உண்மையான நாய்கள் விளையாடுவது மேலும் அந்த ரோபோ நாய் உண்மேயான நாய்களிடம் நடந்து கொண்ட விதம் அனைத்து நெட்டிசன்களையும் கவர்ந்துள்ளது.

இதையடுத்து வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை ரோபோ நாய் விஸ் நிஜ நாய்கள் என்று தலைப்பு கொடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ பல பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

Previous articleநெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்! நாளை முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர்!
Next articleகுரூப் 2-ஏ நேர்காணல் பதவிகளில் காலியாக இருக்கும் 29 இடங்கள்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!