திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற ராக்கெட்ரி படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

0
141

திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற ராக்கெட்ரி படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

ராக்கெட்ரி திரைப்படத்தின் ஓடிடியில் வெளியாகும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் ஹீரோவாக பல ஆண்டுகள் வலம் வந்தவர் மாதவன். ஒரு கட்டத்தில் அவருக்கு பெரிய அளவில் படங்கள் இல்லாத சூழல் உருவான போது, இறுதி சுற்று மற்றும் விக்ரம் வேதா ஆகிய படங்கள் பெரியளவில் கைகொடுத்தன. இதையடுத்து அவர் இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து ராக்கெட்ரி என்ற படத்தின் கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் என அனைத்தையும் ஏற்று நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மாதவன். இந்த திரைப்படம் 3 ஆண்டுகள் உருவாக்கத்தில் இருந்தது. கேன்ஸ் உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிட்டார் மாதவன்.

இந்த திரைப்படத்தில் தமிழில் சூர்யாவும், இந்தியில் ஷாருக் கானும் சிறப்பு வேடத்தில் நடித்தனர். பேன் இந்தியா ரிலீஸாக ஐந்து மொழிகளில் ரிலீஸானது. நம்பி நாராயணன் மனைவி வேடத்தில் சிம்ரன் நடித்திருந்தார். ஜுலை 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் இல்லை.

இந்நிலையில் இப்போது படத்தி ஓடிடி ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் வெளியான 25 நாட்களில் அமேசான் ப்ரைம் வீடியோவில் வரும் ஜூலை 26 ஆம் தேதி ஸ்ட்ரீம் ஆக உள்ளது.