2025ல் மிரட்ட வருகிறார் ராக்கிபாய்!!! கேஜிஎப் 3 படத்தின் அப்டேட்!!!

2025ல் மிரட்ட வருகிறார் ராக்கிபாய்!!! கேஜிஎப் 3 படத்தின் அப்டேட்!!!

நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப், கேஜிஎப் 2 ஆகிய திரைப்படங்களின் வரிசையில் உருவாக இருக்கும் கேஜிஎப் 3 படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு கேஜிஎப் திரைப்படம் வெளியானது. கேஜிஎப் திரைப்படத்தில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, அஷ்யுத் குமார், மாளவிகா அவினாஷ், ராமச்சந்திர ராஜூ, அர்ச்சனா ஜாய்ஸ் மற்றும் பலர் நடித்திருந்தார். ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்தது.

கன்னட திரைப்படமான கேஜிஎப் அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தது. இதையடுத்து 2022ம் ஆண்டு மிக பிரம்மாண்டமாக பேன் இந்தியன் படமாக கேஜிஎப் 2 திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படமும் எதிர்பார்த்த அளவை விட வெற்றி பெற்றது.

இதையடுத்து இந்த திரைப்படத்தின் மூன்றாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. தற்பொழுது கேஜிஎப் 3 திரைப்படத்தின் படப்பிடிப்பு, வெளியீடு குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது.

அதன்படி கேஜிஎப் 3 திரைப்படத்தின் படப்பிடிப்பு 2024ம் ஆண்டு தொடங்கப்படவுள்ளது என்றும் அனைத்து வேலைகளும் முடிந்து கேஜிஎப் 3 திரைப்படம் 2025ம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கேஜிஎப் 3 திரைப்படத்திற்கான நடிகர்கள் தேர்வு ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது என்றும் கேஜிஎப் 3 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஹொம்பாலே பிலிம்ஸ் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.