ரோகித் சர்மா சுப்மன் கில் அடுத்தடுத்து அதிரடியாக சதம் அடித்து அசத்தல்! நியூசிலாந்துக்கு 386 என்ற இமாலய இலக்கு! 

Photo of author

By Amutha

ரோகித் சர்மா சுப்மன் கில் அடுத்தடுத்து அதிரடியாக சதம் அடித்து அசத்தல்! நியூசிலாந்துக்கு 386 என்ற இமாலய இலக்கு! 

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.

ஹைதராபாத்தில் நடந்த முதலாவது ஒரு நாள் ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்திலும் ராய்ப்பூரில் நடந்த இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இதையடுத்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள இந்தூரின் ஹோல்கேர் ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லாதம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி இந்தியா பேட்டிங் செய்ய தொடங்கி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன்கில் இருவரும் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடி நியூசிலாந்து வீரர்களின் பறக்க விட்டனர். மைதானமும் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருந்தது.

அடுத்து இருவரும் ஒரே ஓவரில் அடுத்தடுத்து சதம் அடித்தனர். ரோகித் சர்மா 101 ரன்னிலும் கில் 112 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இருந்தாலும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 54 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 385 என்ற இமாலய இலக்கை எட்டியது.

இதையடுத்து 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 7 விக்கெட் இழப்பிற்கு 37 ஓவரில் 272 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.