கால்வாயில் உயிரிழந்த அழுகிய பன்றி? அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!!

Photo of author

By Parthipan K

கால்வாயில் உயிரிழந்த அழுகிய பன்றி? அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!!

Parthipan K

Rotten pig that died in the canal? The people of the area are in shock!!

கால்வாயில் உயிரிழந்த அழுகிய பன்றி? அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!!

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் தாமிரபரணி ஆற்றில் தலையனை பகுதியிலிருந்து வடக்கோடை மேல் அழகியன் கால்வாய் ஒன்று விவசாய பாசனத்திற்காக அவ்வழியாக செல்கிறது. மேற்படி கால்வாய் பாபநாசம் மற்றும் பொதிகை அடி வழியாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி செல்கிறது.

மேற்படி கால்வாய் மன்னனை என்ற இடத்தில் ஆற்று நீர் மேல் பகுதிகளிலும் கால்வாய் நீர் கீழ் பகுதிகளிலும் செல்வதற்காக பாலம் ஒன்றை அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பாலத்தின் மேலே காட்டுப்பன்றி ஒன்று இறந்து பல நாட்களாக அழுகிய நிலையில் மிதந்து கொண்டிருந்தது.

இந்த   கால்வாயில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை குழந்தைகள் என  அனைவரும் அந்த கால்வியில் தான் குளிக்கின்றனர். இதனால் பெரும் தொற்று ஏற்பட்டு காய்ச்சல் பரவும் அபாயமும் உள்ளது என கூறுகின்றனர்.

ஆகையால் இதற்கு  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இறந்துள்ள காட்டுப்பன்றியை கால்வையிலிருந்து அகற்றி தருமாறும் மற்றும் கால்வாயில் கலந்துள்ள குப்பைகளையும்   தூய்மை செய்து தருமாறும் சமூக ஆர்வலர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே மக்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவில் இப்பணியை முடிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.