ரவுடி சாரின் போட்டோஷூட்! நடிகர் நடிகைகள் மட்டும் தான் போட்டோ ஷூட் பண்ணுவாங்களா என்ன? நாங்களும் பண்ணுவோம்!

Photo of author

By Parthipan K

ரவுடி சாரின் போட்டோஷூட்! நடிகர் நடிகைகள் மட்டும் தான் போட்டோ ஷூட் பண்ணுவாங்களா என்ன? நாங்களும் பண்ணுவோம்!

Parthipan K

தமிழ் சினிமாவில் 90’sகளின் வில்லன் என்றாலே நினைவில் வருவது மன்சூர் அலிகான் தான். தனது வில்லன் ரோலில் சிறப்பாக நடித்து நம்மை  மிரட்டிய மன்சூர் அலிகான் சமீபகாலமாக காமெடி நடிகராக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் இவர் பரிச்சயமாக நடித்திருந்தாலும் இவர் நடித்த கேப்டன் பிரபாகரன் படம் இவருக்கு வில்லனாக பெரும் புகழை பெற்றுத் தந்தது. இந்தப் படத்தை கே ஆர் செல்வமணி இயக்கினார். 

இவர் தனது அலட்டிக்கொள்ளாத டயலாக் டெலிவரி தனித்துவமான பாடி லாங்குவேஜ் போன்றவற்றால் பல்வேறு திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி வந்தார். சமீப காலங்களில் இவர் காமெடி கதாபாத்திரங்களில் பல திரைப்படங்களில் நடித்து தனக்கு காமெடியும் வரும் என்று நிரூபித்துள்ளார்.

இவர் காமெடியனாக நானும் ரவுடிதான்,குலேபகாவலி,சிலுக்குவார் பட்டி சிங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்து அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளார்.

இதுவரை எவரும் பார்த்திராத மன்சூரலிகான் ஆக டிப்டாப்பாக உடை நடை என்று அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை அதிர வைத்துள்ளார்.மன்சூர் அலிகான் போலவே மனோபாலா, சென்ட்ராயன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் சரவணன் உள்ளிட்ட பல நடிகர்கள் தங்களுடைய ஸ்டைலிஷான போட்டோக்களை இணையதளத்தில் வெளியிட்டு வைரலாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.