ரயில்வே வாரியத்தில் 3000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்! 8ம் வகுப்பு படித்திருந்தால் போதும்!

0
65

எலக்ட்ரீசியன், பிட்டர், வெல்டர், வயர் மேன், பெயிண்டர் போன்ற பல்வேறு வர்த்தக பிரிவுகளில் தொழில் பழகுனருக்கான அறிவிப்பை கிழக்கு மத்திய ரயில்வே வாரியம் வெளியிட்டிருக்கிறது. ஆர்வமும், தகுதியும் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம்.

நிறுவனம் கிழக்கு மத்திய ரயில்வே – Eastern Railway

பணி விவரம் பழகுநர்களுக்கு பயிற்சி

யார் விண்ணப்பிக்கலாம்? எந்தவொரு மாநிலத்தையும் பிறப்பிடமாக கொண்டவர்களும், இந்தியர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

அறிவிக்கை Notice No.RRC-ER/Act Apprentices/2022-23
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 3115

வயதுக்கான தகுதி

விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் 15 வயது பூர்த்தியடைந்தவராகவும், 24 வயது பூர்த்தியடைந்தவராகவும் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அறிவிக்கப்படும்.

நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பு இருக்கு மேல் பட்டியல் இன ஜாதிகள், பட்டியல் இன பழங்குடியின வகுப்பினர் 5 வருடங்கள் வரையில் வயதுவரம்பு சலுகை பெற தகுதியுடையவர்கள்.

தேர்வு செய்யும் முறை

10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சர்வ தேச இறுதி பட்டியல் தயாரிக்கப்படும் எழுத்து, வாய்மொழி உள்ளிட்ட எந்த வித தேர்வும் நடத்தப்படாது.

கல்வி தகுதி

50 சதவீத மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் தொழில் பயிற்சிக்கான தேசிய மற்றும் மாநில கவுன்சில்களில் இருந்து தொடர்புடைய வர்த்தகத்தில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

இணைய வழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்- 29-10-2022

விண்ணப்பிக்கும் முறை – www.rrcer.com-kolkata என்ற இணைய பக்கத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்பதாரர்கள் 100 ரூபாய் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மகளிர் உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்பம் செய்வதற்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு வழங்கப்படுகிறது.

ஊதியம்

தொழில் பழகுநர் சட்டத்தின் படி பயிற்சி பெறுபவர்களுக்கு மாதாந்திர ஊதியம் வழங்கப்படும்.