கடந்த 2017 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் பிரபல மலையாள நடிகையை பலாத்காரம் செய்த வழக்கில் அவருடைய கார் டிரைவர் உட்பட 7 கைது செய்யப்பட்டனர். பலாத்காரம் செய்வதற்கு திட்டமிட்டது மற்றும் அதற்காக கொடுக்கப்பட்ட பணம், இதுபோல இன்னும் எத்தனை நடிகைகள் என்பது போன்ற விவரங்களை வழக்கில் சிக்கிய கார் டிரைவர் கூறியிருப்பது மலையாளத் திரை உலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
நடிகையின் கார் டிரைவர் பல்சர் சுனில் இடம் விசாரித்த பொழுது, இந்த பலாத்காரத்திற்கு முக்கிய காரணம் மலையாள நடிகர் திலீப் என தெரிய வந்திருக்கிறது. உடனடியாக போலீசார் அவரையும் கைது செய்து சிறையில் அடைந்திருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்த நடிகையின் கார் டிரைவர் பல்சர் சுனில், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த பொழுது பல திடிக்கிடும் உண்மைகளை வெளியிட்டு இருக்கிறார்.
பல்சர் சுனில் தெரிவித்திருப்பதாவது :-
நடிகையை பலாத்காரம் செய்வதற்கு திட்டமிட்டது நடிகர் திலீப் அவர்கள் தான் என்றும், இதற்காக எங்களுக்கு ரூ.1.5 கோடி ரூபாய் தருவதாக கூறிய நிலையில் 80 லட்சம் ரூபாய் பாக்கி இருப்பதாக கூறியிருக்கிறார். தனக்கு எப்பொழுதெல்லாம் பணம் தேவையோ அப்பொழுதெல்லாம் அவரிடம் கேட்டு பெற்றுக் கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, இந்த நடிகை மட்டுமில்லாது மலையாள திரை உலகில் பல நடிகைகளை இதுபோன்று பலாத்காரம் செய்திருப்பதாகவும் கார் டிரைவர் பல்சர் சுனில் தெரிவிப்பது திரையுலகை மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.