மாணவர்களின் சேர்க்கைக்கு கட்டணமாக ரூ.1 வசூலித்த கல்லூரி!
மேற்கு வங்கத்தை சேர்ந்த கல்லூரி ஒன்று மாணவர்களின் சேர்க்கைக்கு ரூ.1 ரூபாய் சேர்க்கை கட்டணமாக அறிவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாதிரியான முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது என அறிவிக்கின்றனர்.
தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில் மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி மேலும் பணத்தட்டுப்பாடு, அதிக சிக்கல் காரணமாக தவித்து வருவதனால் மேற்கு வங்கத்தில் உள்ள நைஹாட்டியில் உள்ள ரிஷி பாங்கிம் சந்திரா கல்லூரி உதவ முன்வந்துள்ளது.
அனைத்து பாடப்பிரிவுகளும் செய்து 2400 இடங்கள் உள்ளன.இது குறித்து அக்கல்லூரியின் முதல்வர் டாக்டர் சஞ்சிப் சஹா மும்பை மிர்ரர் கூறியதாவது,
ஆன்லைன் படிவங்களுக்கு கட்டணம் ரூ 60 ரூபாய் இருப்பது ஏற்கனவே உள்ளது போல இருக்கும். மற்றும் புதிதாக மாணவர்கள் சேர்க்கை ரூ.1 கட்டணம் வசூலிக்க கல்லூரி முடிவு எடுத்துள்ளது. இதற்கு காரணம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவர்களது இயல்பு நிலை மாறி உள்ளதாகவும், மேலும் அவர்களுக்கு ஏற்படும் பண தட்டுப்பாடு காரணமாக கல்லூரி இம்முடிவுகளை எடுத்துள்ளது என கூறினார்.
மாணவர்களுக்கான ஒரே நுழைவு கட்டணம் ஒரு ரூபாயை நிர்ணயிக்க கல்லூரி நிர்வாக குழு முடிவு செய்தது எனக் கூறியுள்ளார்.