மதுபானத்துக்கு கூடுதம் ரூ 10.. இன்று முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறை!!

Photo of author

By Rupa

Tamilnadu: தமிழகத்தில் இயங்கி வரும் அரசு மதுபான கடைகளில் இன்று முதல் கியூஆர் கோர்டை நடைமுறை படுத்தியுள்ளனர்.

தமிழக மதுபான கடைகளில் இன்று முதல் புதிய திட்டமானது நடைமுறைக்கு வர உள்ளது. அதாவது இனி வரும் நாட்களில் மதுபானங்கள் வாங்க QR கோட் முறையை அறிமுகம் செய்து வைத்துள்ளனர். மதுபானம் வாங்குபவர் இனி ஸ்கேன் மூலம் பணத்தை செலுத்திக் கொள்ளலாம். மேற்கொண்டு வாங்கும் பொருளுக்கு ரசீதும் வழங்கப்படும்.

சமீபகாலமாக டாஸ்மாக் கடை ரீதியான் புகார்கள் வந்த வண்ணமாகத் இருந்தது. குறிப்பாக பாட்டிலுக்கு கூடுதல் 10 ரூபாய் வாங்குவதாகவும், மதுபாங்கங்களில் கரப்பான் பூச்சி போன்றவை இருப்பதாகவும் கூறினர். இவ்வாறு இருக்கையில் தற்பொழுது அமல்படுத்திய திட்டம் மூலம் இவ்வாறான புகார்கள் வருவதை தடுக்க முடியும். பாட்டில்களில் உள்ள பார் கோடை ஸ்கேன் செய்கையில் அதன் கலால் வரி எனத்தொடங்கி, எப்பொழுது எங்கு தயாரிக்கப்பட்டது எங்கிருந்து வருகிறது என முழு விவரங்களையும் அறிய முடியும்.

இனி வரும் நாட்களில் கூடுதல் விற்பனையில் மதுபானங்களை விற்பது போன்றவற்றை தடுக்க முடியும். தற்சமயம் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் இந்த நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. நாளடையில் தமிழகத்தில் உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளில் கொண்டுவரப்படும் என கூறியுள்ளனர்.