Breaking News

இந்த குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவாரணம்! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Photo of author

By Rupa

இந்த குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவாரணம்! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

பெண்கள் கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிப்பு வந்தது முதல் பல புகார்கள் போக்குவரத்து துறையில் அதிகரித்து வருகிறது. பெண்கள் நின்று கொண்டிருந்தாலும் அவர்களை ஏற்றாமல் பேருந்துகள் செல்கின்றது என்றும் கூறிவருகின்றனர். இந்தப் புகார்களை அனைத்தும் தமிழக அரசு ஒன்றன்பின் ஒன்றாக சரி செய்து வருகின்றது. அவ்வாறு இருக்கையில் இன்று அதிகாலை அரசு நடத்துனருக்கு கோர சம்பவம் ஒன்று அரங்கேறியது. இன்று 3 மணி அளவில் சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

அப்போது மதுராந்தகத்தில் குடிபோதையில் ஒரு பயணி ஏறியுள்ளார். அந்தப் பையனிடம் நடத்துநர் பயணச்சீட்டு பெறுமாறு கூறியுள்ளார்.அவர் போதையில் இருந்ததால் வேணுமென்றே நடத்துனரிடம் சண்டையிட்டு உள்ளார். வாய்ப்பேச்சு நேரம் செல்ல செல்ல அடிதடியாக மாறியது. இதில் பயணி தாக்கியதில் நடத்துனர் சம்பவ இடத்தில் காயமடைந்து நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக நடத்துனரை மேல் மருவத்தூர் மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால் நடத்துனரை சோதித்த மருத்துவர்கள் இவர் முன்பே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இன்று இந்த செய்தி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.இதனை அறிந்த ஸ்டாலின் அவர்கள் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் ரூபாயை நிவாரண நிதியாக வழங்குவதாக தெரிவித்துள்ளார். மேலும் நடத்துனர் பெருமாள் பிள்ளை உயிரிழந்தது மிகவும் துயரமான சம்பவம் என்றும் தன்னை வேதனை அடையச் செய்வதாகும் தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி அவருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததாகவும் கூறினார்.

30 ஆண்டுகளாக மாணவிகளிடம் பாலியல் சீண்டல்! ஒரே போஸ்டில் வசமாக மாட்டிய ஆசிரியர்!

பண்ருட்டி வேல்முருகனின் முன்னாள் மனைவி பாஜகவில் தஞ்சம்! அதிர்ச்சியில் ஆளும் திமுக

Leave a Comment