ரூ 1000 கலைஞர் உரிமைத்தொகை கிடைக்கவில்லையா.. வெளியான சூப்பர் அறிவிப்பு!! இது தான் கடைசி மிஸ் பண்ணிடாதீங்க!! 

Photo of author

By Rupa

ரூ 1000 கலைஞர் உரிமைத்தொகை கிடைக்கவில்லையா.. வெளியான சூப்பர் அறிவிப்பு!! இது தான் கடைசி மிஸ் பண்ணிடாதீங்க!!

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு பல நல திட்டங்களை அமல்படுத்தியது. அதில் கட்டணமில்லா பேருந்து, பள்ளி முடித்த மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் இதே போல குடும்ப அட்டை பெண்மணிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இதில் பலமுறை விண்ணப்பித்தும் தகுதி இருந்தும் பணம் கிடைக்காதவர்கள் தற்பொழுது வரை உள்ளனர்.

அதேபோல மீண்டும் புதிய விண்ணப்பம் கோரியும் பல கோரிக்கைகளும் அவ்வப்போது வந்த வண்ணமாக உள்ளது. இதனையெல்லாம்  கருத்தில் கொண்டு தமிழக அரசானது நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே மீண்டும் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பம் அளிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதால் இது இடைப்பட்ட காலத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது.

தற்பொழுது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்ததையடுத்து முதற்கட்ட வேலையாக இம்மாதம் இறுதியில் கலைஞர் உரிமத்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் அச்சடிக்கப்பட உள்ளனர். விண்ணப்ப படிவம் அச்சடிக்கப்பட்டதும் அடுத்த 10 நாட்களுக்குள் இதன் பணிகள் முடிவடைந்து பெண்களுக்கு உரிமை தொகை வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் பெண்களுக்கு ஜூலை மாதத்திலிருந்து புதிதாக விண்ணப்பித்தோருக்கு ஆயிரம் கிடைக்கும் என்று கூறுகின்றனர். மேலும் பெண்கள் மறுவாழ்வு மையத்தில் உள்ளவர்களுக்கும் இத்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இமாதம் இறுதிக்குள் வருமேண்ட்றம் இதன் மூலம் புதிதாக 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைய உள்ளதாகவும் கூறியுள்ளனர்.