பொங்கல் பரிசாக ரூ.1000.. மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!       

Photo of author

By Rupa

பொங்கல் பரிசாக ரூ.1000.. மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!       

Rupa

Rs.1000 as Pongal gift.. Flying order to District Collectors!! Action taken by the Tamil Nadu government!

பொங்கல் பரிசாக ரூ.1000.. மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

பொங்கல் பெரிசு பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் மக்களுக்கு வருடம் தோறும் அரசு சார்பில் இலவச வேஷ்டி சேலை மற்றும் பொங்கல் வைப்பதற்கான பொருட்கள் அத்தோடு ரொக்க பணமும் பரிசாக வழங்கப்படும்.

ஆனால் திமுக ஆட்சி வந்ததை அடுத்து கடந்த முறை பொங்கல் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் ரொக்க பணம் ஏதும் வழங்கப்படவில்லை. அதனால் இம்முறையும் அவ்வாறு இருக்கலாம் என்று மக்கள் சந்தேகித்த நிலையில் பொங்கல் தொகுப்பை குறைத்துக் கொண்டு ரூ. 1000 மட்டும் ரொக்கம் பணம் வழங்குவதாக தெரிவித்தனர்.

இவ்வாறு பொங்கல் தொகுப்பு, இலவச வேஷ்டி சேலை கொடுக்காததை கண்டித்து எதிர்க்கட்சி முதல் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனையடுத்து முதல்வர் கரும்பு சேர்த்து வழங்கப்படும் என்று உத்தரவிட்டார். அதனையடுத்து வரும் மூன்றாம் தேதி பொங்கல் டோக்கன் விநியோகம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள நிலையில் அனைத்து மக்களும் உரித்த பொங்கல் தொகுப்பு மற்றும் பணம் சென்றடைய அந்தந்த மாவட்ட ஆட்சியர் தான் முழு பொறுப்பு என்று கூறியுள்ளனர்.

அனைவருக்கும் சமமான முறையில் பொருட்கள் கிடைக்கிறதா என்று அப்போது கண்காணிக்கும் பொறுப்பு மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துள்ளதை அடுத்து எந்த ஒரு நபருக்கும் பொங்கல் பரிசு இல்லை என்று திருப்பி அனுப்பக் கூடாது எனவும் எச்சரித்துள்ளனர்.