இவர்களுக்குத்தான் ரூ 1000 உரிமைத் தொகை? முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட தகவல்!
கடந்த தேர்தலின் பொழுது திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. அப்போது திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பெண்களுக்கு உரிமை தொகையாக மாதம் ரூ 1௦௦௦ வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால் தற்போது வரை பெண்களுக்கு வழங்கப்படும் உரிமைத்தொகை வழங்கப்படாததால் எதிர்க்கட்சிகள் இந்த தேர்தல் வாக்குறுதி குறித்து பல்வேறு தரப்பில் இருந்து கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் பெண்களுக்கு ரூ. 1000 உரிமைத் தொகை குறித்து 2023-24 ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் மு க ஸ்டாலின் கூறியிருந்தார். அதுபோலவே தமிழக பட்ஜெட்டில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகை தகுதியுடைய பெண்களுக்கு மட்டுமே கிடைக்கும் என அறிவிப்பு வெளியானதால் பல்வேறு சந்தேகம் எழுந்தது.
மேலும் தமிழக சட்டசபையில் நேற்று நடந்த பட்ஜெட் விவாதத்தில் பங்கேற்று பேசிய சட்டமன்ற பாமக தலைவர் ஜிகே மணி மகளிர் உரிமைத் தொகை குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் மு க ஸ்டாலின் கூறுகையில் இந்த அவையில் மட்டுமல்ல பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் இதுகுறித்து பல்வேறு விவாதங்கள் மற்றும் விமர்சனங்கள் செய்யப்படுகிறது.
ஒரு சிலர் பாராட்டியும் புகழ்ந்தும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் எனவே அது தொடர்பாக ஒரு விளக்கத்தை அளிப்பது எனது கடமை. இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டில் இந்த நூற்றாண்டின் மகத்தான திட்டமான மகளிர் உரிமைத்தொகை குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.மேலும் இந்த திட்டத்திற்கு ரூ.7000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டம் இரண்டு நோக்கங்களை கொண்டது. பிரதிபலன் வராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு கொடுக்கும் அங்கீகாரம்.
அதனையடுத்து ஆண்டுக்கு 1௦௦௦ ரூபாய் உரிமைத் தொகை என்பது பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருக்கும். வறுமையை ஒழித்து வாழ்க்கை தரத்தை உயர்த்தி சுயமரியாதையோடு சமூகத்தில் அவர்கள் வாழ்வதற்கு இது பெரிதும் உதவும் எனவும் தெரிவித்தார். மகளிரின் சமூக பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கும். மாதம் ஆயிரம் ரூபாய் என்பது தேவைப்படும் குடும்ப தலைவிகளுக்கு அனைவருக்கும் அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், அதிகாலையில் கடற்கரை நோக்கி விரைந்திடும் மீனவ மகளிர், கட்டுமான தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள் வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள் என பல்வேறு வகைகள் தாங்கள் விலை மதிப்பில்லா உழைப்பை தொடர்ந்து வழங்கி வரும் பெண்கள் இந்த திட்டத்தால் பயன்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இந்த திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் வகையில் திட்டம் அமைந்திடும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார். மாதம் ஆயிரம் ரூபாய் தாங்கள் வாழ்வை சிறிதினும் மாற்றி விடும் என்று நம்பும் எந்த குடும்ப தலைவியும் இந்த அரசு கைவிடாது என உறுதியளிக்கிறேன் என்று கூறினார்.