ரூ 1000 பெண்களே இதை நோட் பண்ணிக்கோங்க.. வருடந்தோறும் வரும் புதிய அறிவிப்பு!! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Kalaingar Magalir Urimai Thogai: இனி கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் புதிய பயணிகள் வருடந்தோறும் சேர்க்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர். மேற்கொண்டு பலதரப்பு பெண்மணிகளுக்கு தகுதி வாய்ந்தும் உரிமைத்தொகை கிடைக்காமலே இருந்தது. இது குறித்து தொடர்ந்து புகார் அளித்ததை யொட்டி மேல்முறையீட்டு மூலம் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

மேற்கொண்டு இனிவரும் நாட்களில் பெண்கள் மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்கள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் உள்ளிட்டோருக்கும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி வருடம் தோறும் புதியதாக குடும்ப அட்டை பெறும் பெண்மணிகளும் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் எனக் கூறியுள்ளனர். அதேபோல இதற்கிடையே உரிமைத் தொகை குறித்து வரும் தகவலை யாரும் நம்ப வேண்டாம் மேற்கொண்டு அரசியல் இது சார்ந்த அறிவிப்பை வெளியிடும் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இனிவரும் நாட்களில் வருடம் தோறும் இதில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுவர் என்றும் உறுதி அளித்துள்ளனர். அதற்கு முன்னதாக விண்ணப்பம் குறித்து அறிவிப்பு வரும் போலி செய்திகளை நம்பி பெண்கள் ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.