தமிழ்நாடு அரசு 2023 ஆம் ஆண்டு செப்டம்பரில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் மூலம் தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. பயனாளர்கள் தகுதி சான்றுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுடைய வங்கிக் கணக்கில் தொகை நேரடியாக மாற்றப்படுகிறது.
ஆனால், சில தகுதியற்ற நபர்களும் இந்த திட்டத்தின் கீழ் தொகை பெறுகின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனை தீர்மானிக்க, பொதுமக்கள் தகுதியற்ற நபர்கள் குறித்து ஆன்லைனில் நேரடியாக புகார் செய்யக்கூடிய வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
புகார் செய்ய எளிய வழிமுறை:
தகுதியற்ற நபர் தொடர்பாக புகார் செய்ய, கீழே கொடுக்கப்பட்டுள்ள https://kmut.tn.gov.in/public_complaints.html இணையதளத்தில் புகார் பதிவு செய்யலாம்.
புகார் பதிவு செய்ய தேவையான தகவல்கள்:
1. புகார் தெரிவிப்பவரின் விவரங்கள்
பெயர்
தொலைபேசி எண்
முகவரி
2. தகுதியற்ற நபர் விவரங்கள்
பெயர்
மாவட்டம்
வட்டம்
(அறிந்தால்) கைபேசி எண், வருவாய் கிராமம், ரேஷன் கடை, முகவரி
தகுதி இல்லாமைக்கு காரணம் தேர்வு செய்ய:
தகுதியற்ற நபரின் குடும்பம் தொடர்பான கீழே உள்ள காரணங்களில் ஒன்று அல்லது அதற்கு மேலாக தேர்வு செய்யலாம்:
வருட வருமானம் ரூ.2.5 லட்சத்தை மீறுகிறது
குடும்பத்தில் அரசு ஊழியர்கள்/ஓய்வூதியர்கள் உள்ளனர்
வருமான வரி செலுத்துபவர்கள் உள்ளனர்
சொந்த நான்கு சக்கர வாகனம் உள்ளது
ஒரே குடும்பத்தில் இரண்டு பேர் உரிமைத் தொகை பெறுகிறார்கள்
500 எழுத்துகளுக்குள் உங்கள் விளக்கத்தை அளிக்கவும். புகார் பதிவு செய்யும் போதே, உங்களுடைய கைபேசி எண்ணுக்கு ஓடிபி அனுப்பி அதை உறுதிப்படுத்த வேண்டும்.
புகார் சென்று சேர்ந்தவுடன், அதிகாரிகள் ஆய்வு நடத்துவார்கள். தகுதியற்ற நபர் என்று உறுதியாகத் தெரியுமானால், அவர்களின் தொகை பெறும் உரிமை ரத்து செய்யப்படும்.