வீட்டு வேலை செய்பவர்கள் முதல் இவர்கள் வரை அரசு வழங்கும் ரூ.1000! எப்படிபெறுவது! இதோ அதற்கான வழிமுறை!
அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கு பல சமூக பாதுகாப்புத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி, 2021 அன்று இ-ஷரம் அறிமுகப்படுத்தினார்.ESIC அல்லது EPFO-ல் உறுப்பினராக இல்லாதவர்கள், சுயதொழில் செய்பவர்கள் அல்லது அமைப்புசாரா துறையில் பணிபுரிவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டனர்.
இதுவரைக்கு 50 லட்சத்திற்கு மேற்ப்பட்ட மக்கள் அமைப்புசாரா தொழிலாளர்களில் இணைந்துள்ளது. இதனால் அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காக இ-ஷரம் கார்டு திட்டத்தை வெளியிட்டனார். ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. கூலித்தொழிலாளியின் மகன்,மகள் மேல்படிப்பு படிக்க அவர்களுக்கு அரசு கல்வி உதவித்தொகையை வழங்குகிறது. இதைப்போல் அரசு, வீடு கட்ட பணம் இல்லாதவர்களுக் குறைந்த வட்டியில் கடன் தொகையையும் வழங்குகிறது.
ஒரு தொழிலாளி விபத்தில் ஊனமுற்றால், அவருக்கு ரூ.10,000 தொகையும், மாறாக அவர் இறந்தால், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ.2,00000 நிதியுதவியாக அரசு வழங்கும். கட்டுமானத் தொழிலாளி, விவசாயத் தொழிலாளி, வீட்டு வேலை செய்பவர், துப்புரவாளர், செருப்புத் தொழிலாளி என அனைவரும் அமைப்புசாராத் துறை ஊழியர்களும் உடனே இணையதளத்தில் மூலம் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் 16 வயது முதல் அதிகபட்சம் 59 வயதுவரை உள்ள அனைத்து தொழிலாளர்களும் பதிவு செயலாம்.
அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்:
ஆதார் அட்டை,
மொபைல் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும்,
அடிப்படை முகவரி ஆதாரம்.
வங்கி விவரங்கள் தகவல்,
பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை கொண்டு தொழிலாளர்கள் இந்த eshram.gov.in இணையத்தின் மூலம் பதிவு செய்து ஊதவித்தொகையை பெற்றுக்கொள்ளலாம்.