அரசு ஊழியர்களுக்கு ரூ.1000 முதல் ரூ.6000 வரை! தீபாவளி போனஸ் குறித்து வெளிவந்த முக்கிய தகவல்!

0
203
Rs.1000 to Rs.6000 for government employees! Important information about Diwali bonus!
Rs.1000 to Rs.6000 for government employees! Important information about Diwali bonus!

அரசு ஊழியர்களுக்கு ரூ.1000 முதல் ரூ.6000 வரை! தீபாவளி போனஸ் குறித்து வெளிவந்த முக்கிய தகவல்!

தீபாவளி வருவதை முன்னிட்டு மத்திய அரசு போனஸ் குறித்து ஓர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாயிரம் வரை வழங்குவதாக தெரிவித்திருந்தது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் பணியில் இருந்தவர்கள் மற்றும் கடந்த நிதியாண்டில் குறைந்தபட்சமாக ஆறு மாதங்கள் பணியில் இருந்தவர்களுக்கு இந்த இடைக்கால போனஸ் வழங்கப்படும் என தெரிவித்திருந்தனர்.

அதற்கு அடுத்தபடியாக புதுவை அரசும் தங்களது ஊழியர்களுக்கு போனஸ் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் புதுவையில் பணிபுரியும் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதுகுறித்த அறிவிப்பை நிதித்துறை வெளியிட்டது. அந்த வகையில் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு ரூ 6, 908 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். அதேபோல தற்காலிக பணியில் இருப்பவர்களுக்கு 1184 ரூபாய் வழங்கப்படும் என கூறியுள்ளனர்.

Previous article“என் திருமணம் எப்போதுன்னு…” நடிகை திரிஷா பகிர்ந்த தகவல்!
Next articleதேவர் குருபூஜை…விருப்பம் தெரிவிக்கும் மோடி!! பின்னணியில் இருக்கும் நோக்கம் என்ன??