புடவைக்கு அடியில் ரூ.1000! எனக்கு ஒட்டு போடுங்கம்மா என பெண்களின் காலில் விழுந்த அதிமுக!

0
162
Rs.1000 under the sari! AIADMK fell at the feet of women as if to glue me!
Rs.1000 under the sari! AIADMK fell at the feet of women as if to glue me!

புடவைக்கு அடியில் ரூ.1000! எனக்கு ஒட்டு போடுங்கம்மா என பெண்களின் காலில் விழுந்த அதிமுக!

சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தேர்தல் களமானது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.அதிமுக மற்றும் திமுக என இரு கட்சியினரும் பல யுக்திகளை பயன்படுத்தி மக்களிடம் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.அதில் பெரும்பாலோனோருக்கு தெரிந்த லஞ்சமும் ஒன்று தான். வாக்குக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பது குற்றம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தாலும் அதை யாரும் மதிப்பதில்லை.அதே நேரத்தில் லஞ்சம் வாங்கி ஓட்டுகளைப் போடுவது சட்டத்திற்கு அப்பாற்பட்டது என்றாலும் மக்கள் அந்த பணத்தை பெற்று கொள்கின்றனர்.

இதனைக் கட்டுப்படுத்துவதற்காக தான் தேர்தல் ஆணையம் துரிதமாக செயல்படும் பறக்கும் படையினர் என பலவித குழுக்களை நியமித்துள்ளது.இருப்பினும் பெரிய அதிகாரிகளின் ஆதரவோடு  பறக்கும் படையினரையே மிரட்டி அந்த பணத்தை மீண்டும் வாங்கிக் கொள்கின்றனர்.இரு தினங்களுக்கு முன் சென்னையிலிருந்து அதிவேகமாக கார் ஒன்று சென்றது.சந்தேகமடைந்த பறக்கும் படையினர் அந்த காரை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் பல லட்ச கணக்கான பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் உயர் அதிகாரியான வருவாய்த்துறை அதிகாரிக்கு அழைப்பு விடுத்து “அடுத்தது  ஆட்சிக்கு வர போகிறவர்களிடம் கொஞ்சம் அனுசரணையாக நடந்துக்கோ” என்று மிரட்டியுள்ளார்.இவர்கள் மிரட்டியதும் அந்த பணத்தை திரும்பவும் பறக்கும் படையினர் கொடுத்து விட்டனர்.அதே போல தற்போது அதிமுக போட்டியிடும் தொகுதியிலும் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.இதனையடுத்து அவர் வாக்கு கேட்டு செல்லும் இடமெல்லாம் அவரை மக்கள் எதிர்க்க தொடங்கியுள்ளனர்.ஏனென்றால் மக்களுக்கு அவர் எதும் செய்யாததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி அவர் பிரச்சாரத்திற்காக சென்ற பல இடங்களில் மக்கள் அவரை ஊருக்குள்ளேயே  விடவில்லை என்று கூறப்படுகிறது.குறிப்பாக அந்த பகுதி முழுவதும் அவருக்கு எதிராக பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இளம் பெண்கள் சரமாரிய அவரிடம் கேள்வி கேட்டுள்ளனர்.அப்போது பெரும்பாலான பெண்கள் அவரிடம்,பண மதிப்பிழப்பு சமயத்தில் மக்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் அல்லல் பட்டு கொண்டிருக்கும் போது பணத்தை மூட்டை மூடையாக ஆற்றில் தூக்கி போட்டவர் நீங்கள் தானே,அப்போதே நீங்கள் மக்களுக்கென்று எதுவும் செய்யவில்லை. இப்போது ஆட்சிக்கு வந்து மட்டும் என்ன செய்யப் போகிறீர்கள் என பாரபட்சம் பார்க்காமல் கேள்விகளை கேட்டுள்ளனர்.

இந்நிலையில் பெண்களின் இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாமல் திக்கி திணறிய கு.ப.கிருஷ்ணன் அரசியல்வாதிகளின் வழக்கமான யுக்தியை பயன்படுத்தி அவர்களை வழிக்கு கொண்டு வந்துள்ளார்.கொடுக்க வேண்டியதை கொடுத்தால் இவர்களை வழிக்கு கொண்டு வந்து விடலாம் என்று எண்ணிய அவர் லஞ்சமாக பெண்களுக்கு புதிய புடவைகளை கொடுத்து அதில்  ஆயிரம் ரூபாய் பணத்தையும் வைத்து கொடுத்துள்ளார்.அதன்பின் அவர்களிடம் பூத் ஸ்லிப் கொடுக்கும் போது மேலும் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகவும் உறுதியாக கூறியுள்ளார்.

இவ்வாறு மக்கள் வேட்பாளருக்கு எதிராக பல கேள்விகளை கேட்டும் பிறகு அவர்கள் கொடுக்கும் லஞ்சத்தை பெற்றுக்கொண்டு அமைதியாகி விடுவதை தான் வழக்காமகவும் வைத்துள்ளனர்.இப்படி இவர்கள் செய்வதால் தான் இந்த அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வந்த பிறகு மக்களின் பிரச்சனைகளை  கண்டுக்கொள்ளாமல் விட்டு விடுகின்றனர்.தேர்தல் நேரத்தில் பணம்,பரிசுபொருட்கள் என லஞ்சமாக பெற்றுக்கொண்டு மக்கள் வாக்களிப்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.அனைவரும் நேர்மையான முறையில் வாக்களிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையமும் சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் அறிவுறுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடதக்கது.

Previous articleதொகுதிக்குள் நுழைய கிளம்பிய எதிர்ப்பு! கொடுக்க வேண்டியதை கொடுத்த அதிமுக வேட்பாளர்
Next articleகேள்வி கேட்ட தொண்டரை ரைட் லெப்ட் வாங்கிய கமல்ஹாசன்! ஆட்சிக்கு வரும் முன்னே இவ்வளவு கடுமையா?