இனி மாதந்தோறும் ரூ.1000.. இவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் ஏழை எளிய மாணவிகள் பொருளாதார காரணங்களால் 12 ஆம் வகுப்பிற்கு பின்னர் உயர்கல்வியை தொடர முடியாமல் போய்விடுகிறது.மாணவிகள் தங்கள் கல்வியை தொடர பணம் ஒரு தடையாக இருக்க கூடாது என்ற நோக்கில் தமிழக அரசானது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் ‘புதுமைப் பெண்’ என்ற உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
அந்தவகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தில்(புதுமைப் பெண் திட்டம்) மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்க்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் மூலம் மாணவிகளின் கல்வித் தரம் உயர்வதோடு குழந்தை திருமணமும் தடுக்கப்படுகிறது.
இந்நிலையில் ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அவர்கள் அரசுப் பள்ளியில் பயின்று 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவிகள் மேற்படிப்பை தொடர புதுமைப் பெண் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவித்திருக்கிறார்.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்திற்கான தகுதிகள்:
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவிகள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்திருக்க வேண்டும்.
அதேபோல் இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் RTE மூலம் 6 முதல் 8 வகுப்பு வரை தனியார் பள்ளியிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியிலும் படித்த மாணவிகள் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டதிற்கு விண்ணப்பம் செய்ய தகுதியானவர்கள் ஆவர்.
ஒரு வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் உயர்கல்வி தொடர இருக்கும் பட்சத்தில் அவர்கள் அனைவருக்கும் இந்த திட்டத்தின் மூலம் உதவித் தொகை கிடைக்கும்.
12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு உயர் கல்வி தொடர இருக்கும் மாணவிகளுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும்.மாணவிகளின் பயிற்சி காலத்தில் இந்த உதவித் தொகை வழங்கப்படாது.