11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ 10000!! உடனே அப்ளை பண்ணுங்க!!

Photo of author

By Rupa

11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ 10000!! உடனே அப்ளை பண்ணுங்க!!

Rupa

11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ 10000!! உடனே அப்ளை பண்ணுங்க!!

வருடம் தோறும் தமிழக முழுவதும் உள்ள மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தமிழை வளர்க்கும் விதத்தில் பேச்சு, கவிதை கட்டுரை போட்டி என அனைத்தும் நடத்தப்படும்.

மேலும் அதில் வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பு தொகையும் பரிசாக வழங்கப்படுவது உண்டு. அதுமட்டுமின்றி மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட அடுத்த கட்ட போட்டிக்கு சென்னைக்கும் அனுப்பி வைப்பர்.

அந்த வகையில் இம்முறையும் அதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கூறியிருப்பதாவது, 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இம்முறையும் பேச்சு, கவிதை, கட்டுரை என அனைத்து போட்டிகளும் நடைபெற உள்ளது.

இந்த போட்டிகளுக்கு ரூபாய் பத்தாயிரம் ரூபாய் 7000 ரூபாய் என தரவரிசைப்படி வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பு தொகையும் வழங்கப்பட உள்ளது. எனவே ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் உத்தரவின்படி கலந்து கொள்ளலாம்.

இந்த போட்டியானது இம்மாதம் 27ஆம் தேதி அரசு சட்டக் கல்லூரியில் காலை 9 மணி அளவில் தொடங்க உள்ளது. இது குறித்து சுற்றறிக்கையானது கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேற்கொண்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கள் தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் போட்டிகளில் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.