மாதம் மாதம் ரூ.12000 உங்க வங்கி கணக்கில் வரும்!! இதை உடனே செய்யுங்கள்!!
நம் நாட்டில் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு முதலீடு செய்பவரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.தங்கள் வருமானத்தில் 3இல் ஒரு பங்கை பங்கு சந்தை,அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகின்றனர்.ஓய்வு பெற்ற பின்னர் எவ்வித சிரமும் இன்றி பிறரை சார்ந்து வாழாமல் இருக்க இளம் வயதில் இருந்தே முதலீடு செய்யும் பழக்கம் நம் இந்தியர்களிடம் அதிகரித்து வருகிறது.
அரசு வங்கி சேமிப்பு திட்டம்,அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டம் போல் அரசு காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்(LIC) பல சிறந்த ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இதில் சிறந்த ஓய்வூதிய திட்டமாக LIC சாரல் திட்டம் திகழ்கிறது.இது ஒருமுறை முதலீட்டு திட்டமாகும்.அதாவது ஒருமுறை முதலீடு செய்தால் உங்கள் முதலீட்டிற்கு ஏற்ப வாழ்நாள் முழுவதும் ஓய்வூதிய பலனை அடைய முடியும்.
LIC சாரல் பென்ஷன் திட்டம்
இந்த திட்டத்தில் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியும்.அதாவது 40 முதல் 80 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே இந்த சாரல் பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.
40 வயதை கடந்தவர்கள் தங்கள் பிஎப் கணக்கில் இருக்கின்ற பணத்தை கொண்டு இந்த திட்டத்தில் முதலீடு செய்தாலே போதும்.உங்களுக்கான வாழ்நாள் ஓய்வூதிய பலன் கிடைத்துவிடும்.இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கான வரம்பு இல்லை.தாங்கள் எவ்வளவு தொகை வேண்டுமானலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.42 வயதில் இருக்கும் ஒருவர் ரூ.30 லட்சம் முதலீடு செய்கிறார் என்றால் அவருக்கு மாதந்தோறும் ரூ.12,388 ஓய்வூதியமாக கிடைக்கும்.வருமான வரி சட்டத்தின் கீழ் இந்த திட்டத்திற்கு வரிச் சலுகை உண்டு.
நீங்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பாலிசி எடுத்த 6 மாதங்களுக்கு பின்னர் பணத் தேவை ஏற்பட்டால் எளிதில் கேன்சல் செய்து முதலீட்டு தொகையை பெற்றுக் கொள்ளலாம்.அதேபோல் இந்த திட்டத்தின் வாயிலாக எளிதில் கடன் பெற முடியும்.