
Central Gov of India: மத்திய அரசானது “பிரதான் மந்திரி விகாசித் பாரத் ரோஜ்கர் யோஜனா” (PM-VBRY) என்ற புதிய வேலைவாய்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டமானது மூலம் முதன்முறையாக வேலைக்கு செல்வோருக்கு நிதி உதவி செய்யும் வகையில் அமைத்துள்ளனர். அந்தவகையில் முதல் முறையாக வேலைக்கு செல்வோருக்கு இந்த திட்டத்தின் மூலம் ரூ 15000 வழங்கப்படும்.
இந்த 15000 ரூபாயானது இரண்டு தவணைகளாக வழங்கப்பட உள்ளது. முதல் தவணையாக ஆரம்பத்தில் ரூ.7,500, இரண்டாவது தவணையாக மீதமுள்ள பணம் ஆறு மாதம் கழித்தும் வழங்கப்பட உள்ளது. இந்த தொகையானது முன்பே அவர்கள் ஆதருடன் இணைத்துள்ள வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்ப்படுமாம். இந்த உதவித்தொகையை 18 முதல் 35 வயதுள்ள நபர்கள் பெற முடியும்.
அதிலும் மாதம் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக சம்பளம் பெறும் ஊழியர்கள் மட்டுமே இந்த உதவி தொகைக்கு தகுதி பெற முடியும். மேலும், நிறுவனங்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படுவதாக கூறியுள்ளனர். குறிப்பாக புதிய இளம் பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்துவதில் பெருமளவு சிக்கல் இருப்பதாக சில நிறுவனங்கள் எண்ணுகின்றனர்.
இதனை சரிசெய்யும் விதமாக பலருக்கும் வேலை கிடைக்கும் நோக்கில், புதிய இளம் பட்டதாரிகளை வேலைக்கு எடுத்தால் நிதியுதவி கொடுக்கப்படும் என கூறியுள்ளனர். அந்தவகையில் புதிய ஊழியர்களை நியமிக்கும் நிறுவனங்களுக்கு மாதம் ரூ.3,000 ஊக்கத்தொகை வழங்கப்படுமாம். இந்த திட்டத்தின் மூலம் அரசாங்கம் கிட்டத்தட்ட 3.5 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்கலாம் என திட்டமிட்டுள்ளனர்.