Pongal Festival: பொங்கல் தொகுப்பு குறித்து முக்கிய தகவல்களை வெளியிடுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல், தமிழகத்தில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும். பொங்கல் திருநாளை முன்னிட்டு வருடம் தோறும் தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி சேலை மற்றும் அரிசி கரும்பு சர்க்கரை உள்ளிட்டவை கொடுத்து வருகிறது. குறிப்பாக கொரோனா தொற்றின் போது அதனுடன் ரூ 1000 ரூபாய் ரொக்கமும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு வரை பணம் இடைவிடாது கொடுத்து வருகின்றனர்.
ஆனால் இம்முறை திமுக ஆட்சிக்கு வந்ததையடுத்து குடும்ப அட்டை உள்ள பெண்மணிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கி வருகிறது. இதன் மூலம் இரண்டு கோடியே 40 லட்சம் பேர் பயனடைந்து வரும் நிலையில் இவர்களுக்கும் இந்த பொங்கல் தொகுப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இவ்வாறு வழங்கப்படும் நிலையில் ஒரே குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 2000 என்று வழங்கப்படும்.
குறிப்பாக பெண்மணிகளுக்கு இது லக்கி ஜாக்பாட்டாக இருக்கும். மேற்கொண்டு இந்த பொங்கல் தொகுப்பில் சிறப்பு பொருட்கள் இருப்பதாகவும் அது குறித்து நாளடைவில் தகவல் வெளியிட உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் குடும்ப அட்டை பெண்மணிகளுக்கு ஆயிரம் வழங்கும் பட்சத்தில் பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கப்படும் என்பது குறித்து அறிவிப்புகள் நாளடைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு இருக்கையில் வருடம் தோறும் பொங்கலுக்கு ஒரு வாரம் முன் அதாவது 15ஆம் தேதி விநியோகம் தொடங்கப்படும் நிலையில் இந்த வருடம் பத்தாம் தேதி தொடங்குவதாக தெரிவித்துள்ளனர். இது குறித்த முன்னேற்பாடுகள் வேஷ்டி சேலை டென்டர்கள் உள்ளிட்ட வேலைகள் நடப்பில் உள்ளதாகவும் கூறியுள்ளனர்.