ரூ. 2000 நிவாரணம் இன்னும் வாங்கலையா? இந்த மாதம் வாங்கிக்கலாம்!

0
104

முதல்வர் ஸ்டாலின் கொடுத்த கொரோனா நிவாரண உதவி தொகை 2000 ரூபாயை கடந்த மாதத்தில் வாங்காதவர்கள் இந்த மாதம் வாங்கிக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

இதன் தொடர்பாக அரசு வெளியிட்ட செய்தியில், தமிழகத்தில் மொத்தம் 2.09 கோடி அரிசி ரேஷன் கார்டுளுக்கு மே 15 முதல் நிவாரண தொகை முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கப்பட்டது.

நேற்றுவரை 98.4 சதவீதம் குடும்பத்தினர் உதவி தொகை பெற்று உள்ளனர். மீதம் இருக்கின்ற குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, தனிமை படுத்தப்பட்டு, அல்லது முழு ஊரடங்கு, சொந்த ஊருக்கு சென்ற அவர்கள், முகவரி மாற்றம் உடையவர்கள், போக்குவரத்து வசதி இல்லாததால் ரேஷன் கடைக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பவர்கள், இதுபோல் உள்ளவர்கள் மட்டுமே நிவாரண உதவித்தொகை பெறவில்லை எனத் தெரிவித்துள்ளது.

இது அரசின் கவனத்திற்கு சென்றுள்ளதால் நிவாரண தொகையை போன மாதம் வாங்காதவர்கள், இந்த மாதம் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் வாங்கி கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. அதேபோல் கடந்த மாதம் வாங்க முடியாமல் போன ரேஷன் பொருட்களையும் இந்த மாதம் சேர்த்து வாங்கிக்கொள்ள அரசு உதவ வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Previous articleதமிழகத்தில் மூன்று நாட்கள் இந்த பணிகள் நிறுத்தம்! அரசு நடவடிக்கை!
Next articleமத்திய அரசு சதி செய்கிறதா?? தமிழகத்தில் நீடிக்கும் தடுப்பூசி தட்டுப்பாடு!!