மாணவர்களுக்கு ரூ.2000 ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு அறிவிப்பு

0
131
Sengottaiyan-News4 Tamil Online Tamil News
Sengottaiyan-News4 Tamil Online Tamil News

தமிழகத்தில் கொரோனா வைரசின் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் முன்னரே 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்து விட்டது. ஊரடங்கு அமலுக்கு வந்த கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி நடந்த கடைசி தேர்வில் கொரோனா அச்சத்தால் ஏறக்குறைய 32 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்பதால் அந்த தேர்வை மட்டும் மீண்டும் எழுத மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் விடைத்தாள்கள் திருத்தும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது. இதனையடுத்து 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் 2019-2020 ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.2000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது நடப்பு கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தோகையாக ரூ.2000 வழங்க தமிழக அரசு ரூ.ரூ.107.1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஊக்கத்தொகையை பெறுவதற்காக மாணவர்கள் அவர்களது வங்கி கணக்குகளை உடனடியாக EMIS தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது.

Previous articleவெப்பச்சலனம் காரணமாக 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு
Next articleகொரோனா பாதுகாப்பு குறித்து தனி ஒருவராக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த காவல் ஆய்வாளர்