வாகன விபத்தால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2,00,000 இழப்பீடு தொகை வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!!

0
318
Rs 2,00,000 compensation will be given to the family of those who died due to vehicle accident - Tamil Nadu Government Announcement!!
Rs 2,00,000 compensation will be given to the family of those who died due to vehicle accident - Tamil Nadu Government Announcement!!

வாகன விபத்தால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2,00,000 இழப்பீடு தொகை வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!!

தற்பொழுது சாலை விபத்துகள் ஏற்படுவது சர்வ சாதாரணமாகி விட்டது.போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் அஜாக்கிரதையாக வாகனம் இயக்குவது,மது அருந்தி விட்டு வாகனம் இயக்குவது உள்ளிட்ட காரணங்களால் அதிகளவு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.சாலை விபத்தில் சிக்கும் நபர்களுக்கு உயிரிழப்பு,உடல் உறுப்புகளை இழப்பது போன்ற பரிதவிக்கும் நிலை ஏற்படுகிறது.

விபத்துகளை கட்டுப்படுத்த போக்குவரத்து துறை அபராதம் விதிப்பது,வழக்கு பதிவு செய்வது போன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும் வாகன விபத்துக்கள் மட்டும் குறைந்தபாடில்லை.

இந்தியாவை பொறுத்தமட்டில் 18 வயதிற்குட்பட்ட நபர்கள் வாகனம் இயக்குவது சட்டப்படி குற்றமாகும்.ஆனால் சட்டத்தை மீறி நெடுஞ்சாலைகளில் மைனர்கள் வாகனம் இயக்குவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது.குறிப்பாக அடையாளம் தெரியாத வாகனங்களால் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25,000 மற்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.12,500 இழப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் “மோட்டார் வாகன இழப்பீட்டு நிதியம்” என்ற புதிய திட்டத்தின் மூலம் இழப்பீட்டு தொகை 8 மடங்கு உயர்த்தப்பட்டது.

அதன்படி அடையாளம் தெரியாத வாகனங்கள் ஏற்படுத்திய விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2,00,000 மற்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 என்று இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் மற்றும் விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் விண்ணப்பித்து இழப்பீட்டு தொகை பெறலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஜூன் 01 தேதி முதல் 18 வயதிற்குட்பட்ட மைனர்கள் வாகனம் இயக்கினால் அவர்களின் பெற்றோருக்கு ரூ.25,000 அபராதம் மற்றும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதிக்கும் புதிய விதி அமலுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஅங்கவை, சங்கவை.. இவர்கள் யாரென்று தெரியாமல் கலாய்த்து விட்டோமே.!!
Next articleஇந்தியா கூட்டணியிலிருந்து வெளியேறும் புதிய தலைவர்.. வெளியான ஷாக் ரிப்போர்ட்!!