ரூ.28 லட்சம் தங்கம் பறிமுதல்! சென்னையில் துணிகரம்!

Photo of author

By Hasini

ரூ.28 லட்சம் தங்கம் பறிமுதல்! சென்னையில் துணிகரம்!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. ரகசிய தகவல் கிடைக்கப்பெற்றதால் சுங்க இலாகா அதிகாரி கமிஷனர் ராஜன் சௌத்ரி விமான பயணிகளிடையே சோதனை மேற்கொள்ள ஆணை பிறப்பிட்டார்.அவரது ஆணைக்கிணங்க சுங்க இலாகா அதிகாரிகள், பயணிகளை தீவிரமாக சோதனை செய்தனர்.அப்போது அஜீத்குமார்(22)  என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்த போது அவர் பெரம்பலூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.அவரை விசாரித்ததில்  முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடமைகளை சோதனை செய்தனர்.

மேலும் இரண்டாம் கட்ட சோதனையில்  அவரை தனி அறையில் வைத்து விசாரித்தனர்.அப்போது அவரது உள்ளாடைக்குள் தங்க கட்டிகள் மறைத்து வைத்தது தெரிய வந்தது.இதே போல் மற்றொரு நபரும் சோதனையில் பிடிபட்டார். அவர் சென்னையை சேர்ந்த நூர்முகமது உஸ்மான் (22) என்பது தெரியவந்தது.அவரை சோதனை செய்ததில் அவரும் இதே போல  உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.இதனையடுத்து 2 பேரிடம் ரூ.28 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கம் சிக்கியதாக சுங்க இலாகா அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் தங்கத்தை  பறிமுதல் செய்து அவர்கள் 2பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.