இனிமேல் கேஸ் சிலிண்டருக்கு ரூ 300 மானியம்!! ஆளுநர் ஒப்புதல் !! 

Photo of author

By Amutha

இனிமேல் கேஸ் சிலிண்டருக்கு ரூ 300 மானியம்!! ஆளுநர் ஒப்புதல்!! 

இனிமேல் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மான்யம் வழங்குவதற்கு கவர்னர் ஒப்புதல் வழங்கியுள்ளார். புதுச்சேரியில் உள்ள மக்களுக்கு இனிமேல் ரூ.300 மானியம் வழங்க அம்மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

எப்போதும் கேஸ் சிலிண்டர் வாங்கும் போது ஒரு குறிப்பிட்ட மானியத்தொகை குடும்ப அட்டைத்தாரரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக மானியமாக  சொற்ப தொகையே மக்களுக்கு கிடைத்து வந்தது. மேலும் கேஸ் விலை கடுமையான விலையேற்றத்தினால் மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் நமக்கு அண்மையில் உள்ள யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ரூ.300 மானியம் ஒவ்வொரு குடும்ப  அட்டைத்தாரர்களுக்கும் வழங்க ஒப்புதல் வந்துள்ளது. கடந்த சட்டபேரவை கூட்டத் தொடரில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப  அட்டைத்தாரர்களுக்கும் மாதம் ஒரு வீட்டு உபயோக சிலிண்டருக்கு ரூ.300 வழங்கப்படும் என அறிவித்து இருந்தார்.

இதன்படி  , வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு அட்டைதாரர்களுக்கு ஒரு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு தலா ரூ.300 மானியமும்,   வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் அட்டை தாரர்களுக்கு சிலிண்டருக்கு ரூ.150 மானியம் வழங்க துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான அரசாணையும் தற்போது  வெளியிடப்பட்டுள்ளது.

அரசிதழில் இந்த அரசாணையானது   வெளியிடப்பட்டவுடன் உடனடியாக அமலுக்கு வரும் எனவும், இந்த மானியத்தொகை அவரவர் வங்கிக்கணக்கில் நேரிடையாக செலுத்தப்படும் எனவும் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.