வேலையில்லாத இளைஞர்களுக்கு இனி மாதம் ரூ 3000! முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
குஜராத் மாநிலத்தில் தற்பொழுது சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தீவிர பணியில் முப்பெரும் கட்சிகளும் ஈடுபட்டு வருகிறது. சென்ற முறை பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே பெரும் போட்டி நிலவியது. இம்முறை இந்த கட்சிகளுடன் ஆம் ஆத்மி கட்சியும் சேர்ந்துள்ளது. மூன்று கட்சிகளும் மக்களை கவரும் வகையில் தற்போதையிலிருந்தே பல நல திட்டங்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி வந்தால் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாக அரவிந்த் கெஜ்ரவால் உறுதியளித்துள்ளார்.
அதுமட்டுமின்றி வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம் மூன்று ஆயிரம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். அத்தோடு வேலையில்லாத இளைஞர்களுக்கு 10 லட்சம் வரை புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக கூறினார். இந்த ஆண்டு இறுதியில் குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் வேலையில் அரவிந்த் கெஜ்ரவால் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.
அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவது போல குஜராத் மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளார். டெல்லியை அடுத்து குஜராத்திலும் தங்களது கட்சியை நிலைநாட்ட ஆம் ஆத்மி முழுமையாக செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பாஜக டெல்லியை அடுத்து பஞ்சாப்,இமாச்சலப் பிரதேசம், குஜராத் ,கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தங்களின் நிலைப்பாட்டை இழந்து வருவது தெரிகிறது.
இந்த தக்க நேரத்தில் இந்த இடங்களிலெல்லாம் தங்கள் நிலையை நிலைநாட்டி விட ஆம் ஆத்மி பெரிதும் முயற்சித்து வருகிறது. அதன் முதல் படி தான் குஜராத் மாநிலத்தின் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரை தவிர்த்து மற்ற அனைத்து பொறுப்புகள் மற்றும் குழுக்களையும் கலைத்துள்ளனர். இதற்கடுத்து புதிய குழு அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். அந்த வகையில் ஆம் ஆத்மி முன்னிலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.