தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்த ரூ.400 கோடி! எந்த காரணத்திற்கு தெரியுமா?
கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.அதிலும் தற்போதைய கொரோனா 2-வது அலை சுனாமி போல வேகமாக பரவி வருகிறது.மக்கள் பலர் ஆக்ஸிஜன் இன்றியும்,மருத்துவமனைகளில் படுக்கைகள் இன்றியும் பெருமளவு பாதித்து வருகின்றனர்.தமிழகமே இத்தொற்றிலிருந்து மீண்டு வர முடியாமல் தள்ளாடும் நிலையில் உள்ளது.குறிப்பாக இந்திய அளவி பார்க்கும் போது அதிக அளவு பலி எண்ணிக்கை டெல்லியில் உள்ளது.
அதனை கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசுகளும் கட்டுப்பாட்டு வழிமுறைகளை திட்டமிட்டு வருகின்றனர்.மக்கள் வெளியே செல்லும்போது சமூக இடைவெளிகளை பின்பற்றுமாறும்,முகக்கவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.தற்போது இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி,கொரோனா மையங்கள் மற்றும் ஆக்ஸிஜன் தேவை அதிக தட்டுப்பாடாக உள்ளது.இதனையெல்லாம் கட்டுபடுத்து பிரதமர் நரேந்திர மோடி மாநில அரசுடனும்,ஆளுநர்,துணை ஆளுநர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.
இதனை முடிந்த அளவிற்கு கட்டுபடுத்தும் விதத்தில் விமானங்கள்,ரயில்கள் மத்திய அரசு தேவையான ஆக்ஸிஜன்,தடுப்பூசி ஆகியவற்றை மாநிலங்களுக்கு ஏற்ப விநியோகித்து வருகிறது.இவ்வாறு நடைமுறை படுத்திக்கொண்டிருக்கும் வேளையில் மாநில அரசுகளுக்கு பேரிடர் நிதியாக ரூ.8,887 கோடி ஒதுக்கியுள்ளது.இந்த நிதியில் பாதி சதவீதமான ரூ.4,436 கோடியை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படலாம் என தெரிவித்துள்ளனர்.இதில் தமிழ்நாட்டிற்கு ரூ.400 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.