DMK: திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதாக தெரிவித்திருந்தது. அந்த வகையில் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கழித்து உரிமைத்தொகை வழங்கியது. அதிலும் இந்த திட்டமானது அனைவருக்கும் கிடைக்கும் வகையில் வரையறுக்கப்படவில்லை. ஆரம்ப கட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழிருக்கும் பெண்களுக்கு மட்டுமே வழங்கி வந்தனர். ஏன் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மாணவிகளுக்கு கூட தரப்படவில்லை.
இதனால் பெருமளவில் இத்திட்டத்தின் மூலம் பெண்களுக்கு திருப்தி இல்லை. நாளடைவில் இத்திட்டம் ரீதியாக ஒவ்வொன்றையும் அப்டேட் செய்து வந்தனர். அந்த வகையில் தற்போது தேர்தல் நெருங்கும் நேரத்தில் இனி அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்கும், அதிலும் வருடம் தோறும் பயனாளிகள் சேர்க்கப்படுவார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். தற்போது வரை இந்த திட்டத்தின் கீழ் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்து வரும் நிலையில், தற்போது தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஆளும் கட்சி மாவட்டம் தோறும் உங்களுடன் ஸ்டாலின் என்ற முகாமை நடத்தி வருகிறது.
அதில் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர். அந்த வகையில் தீபாவளிக்கு முன்பு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு பணம் வழங்க அரசு ஏற்பாடு செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அத்தோடு திமுக ஆட்சி மீது பொதுமக்கள் பெருமளவில் அதிருப்தியில் இருப்பதால் முதலில் பெண்களை தங்கள் பக்கம் சாய்க்க வேண்டும் என்ற பாணியில் தீபாவளிக்கு குடும்ப தலைவிகளுக்கு மட்டும் ரூ.4,000 தர உள்ளார்களாம். இது ரீதியான அறிவிப்பு கூடிய விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.