பெண்களின் வங்கி கணக்கிற்கு வரும் ரூ 5000.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்!! தமிழக அரசு திடீர் அறிவிப்பு!!

Photo of author

By Rupa

பெண்களின் வங்கி கணக்கிற்கு வரும் ரூ 5000.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்!! தமிழக அரசு திடீர் அறிவிப்பு!!

Rupa

Updated on:

rs-5000-to-womens-bank-account-dont-miss-out-and-apply-now-tamil-nadu-government-sudden-announcement

TN Gov: 2025 மற்றும் 26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரானது சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பயன்பெறும் வகையில் புதிய திட்டம் சார்ந்த  நடவடிக்கைகளை சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ளார். இதில் முதலாவதாக, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டால் அதே வீட்டிலிருக்கும் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவது தவிர்க்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த மானிய கோரிக்கை விவாதத்தில், அதற்கு தளர்வு அளித்துள்ளனர்.

எந்த வீட்டில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுகிறார்களோ, அதே குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு குடும்ப அட்டை மூலம் ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் என தொடங்கி திருநங்கைகள் வரை அனைவருக்கும் உதவி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானியம் வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த மானியமானது கிட்டத்தட்ட 2000 பெண்களுக்கு வழங்கப்படும் என கூறியுள்ளனர். இதற்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் மாவரைக்கும் இயந்திரம் வாங்க 50% மானியத்தை தமிழக அரசு வழங்க உள்ளது. அந்த வகையில் தமிழக அரசு 5000 கொடுத்து உதவும். குறிப்பாக என் திட்டத்திற்கு கணவனால் கைவிடப்பட்டவர்கள், கைம்பெண்கள், ஆதவற்ற பெண்களுக்கு முன்னுரிமை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி பெண்கள் சுய தொழில் தொடங்க வேண்டுமென்றால் அவர்களுக்கு 50 ஆயிரம் வரை மானியம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. மேற்கொண்டு சமையல் எண்ணெய் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்பவர்களுக்கு 3 லட்சம் வரை கடனுதவி 50% வரை மானியம் போன்ற எண்ணற்றத் திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதலாவதாக மாவு அரைக்கும் இயந்திரத்துக்கு தான் ஐயாயிரம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.