காயமடைந்த இவர்களுக்கு தலா ரூ.50000! முதல்வரின் அதிரடி உத்தரவு!

Photo of author

By Rupa

காயமடைந்த இவர்களுக்கு தலா ரூ.50000! முதல்வரின் அதிரடி உத்தரவு!

Rupa

Rs.50000 each for the injured! The Prime Minister's action order!

காயமடைந்த இவர்களுக்கு தலா ரூ.50000! முதல்வரின் அதிரடி உத்தரவு!

சமையல் எரிவாயு வெடிப்பதால் பல கோர விபத்துக்கள் நடக்கிறது. அந்த வகையில் தற்பொழுது கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அடுத்து பார்வதிபுரத்தில் ஒரு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. பார்வதிபுரம் அருகே டீ கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் அவ்வழியே செல்பவர்கள் அங்கு சென்று தேனீர் குடித்துவிட்டு செல்வது வழக்கம். அங்கு சந்தைக்கு வருபவர்கள் முதல் நடைபயிற்சி செய்பவர்கள் என அனைவரும் அந்த கடைக்கு வந்து தேனீர் அருந்துவது வழக்கமான ஒன்றுதான்.

அவ்வாறு இன்று தேநீர் அருந்த வந்தவர்கள் அந்த கடையில் உள்ள செய்திதாளை படித்துக் கொண்டு அங்கேயே  நின்று பேசி இருந்துள்ளனர். அப்போது திடீரென்று அக்கடையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது. அதில் கடையில் ஊழியர்கள் முதல் தேநீர் அருந்த  வந்த வாடிக்கையாளர் வரை அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக வந்து காயமடைந்த நபர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.

காயமடைந்தவர்களில்  இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த செய்தியை அறிந்த முதல்வர் நிவாரணத் தொகையில் இருந்து காயம் அடைந்தவர்களுக்கு தலா 50,000 வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்குமாறு கூறியுள்ளார்.