இந்த குடும்பங்களுக்கு தலா ரூ 50 ஆயிரம்! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!

Photo of author

By Rupa

இந்த குடும்பங்களுக்கு தலா ரூ 50 ஆயிரம்! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!

கொரோனா தொற்றால் அதிக அளவு மக்களை இழக்க நேரிட்டது. முதல் அலையில்  அதிக அளவு பாதிப்பு காணப்படவில்லை என்றாலும் இரண்டாவது அலையில்  தொற்று பாதிப்பானது   உச்சத்தை எட்டியது. அனைத்து மாநிலங்களிலும்  கொத்துக்கொத்தாக மக்களை இழக்க நேரிட்டது. அவ்வாறு கொரோனா தொற்றால் உயிரிழந்த  இழந்த குடும்பங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நிவாரணமாக வழங்குவதாக அனைத்து மாநில அரசுகளும் கூறியது.

அவற்றில் தமிழக அரசும் கொரோனா தொற்றால்  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ 50,000 நிவாரணமாக வழங்குவதாக தெரிவித்தது. இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் 36 ஆயிரத்து 815 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த குடும்பங்களுக்கு தலா 50000 நிவாரண தொகை வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கூறி இருந்தார். நிவாரண தொகை வழங்கும் திட்டத்தை கடந்த மாதம் 8ஆம் தேதி முதல்வர் தொடங்கி வைத்தார்.

ஆனால் அதற்கான அரசாணை வெளியிடப்படாமலே இருந்தது.தற்போது  அத்திட்டத்திற்கான 172 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தற்பொழுது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த கொரோனா நிவாரண நிதியை பெற விரும்புவோர் இணையதளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது. இதேபோல கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழையால் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் அதிக அளவு நாசமானது.அவ்வாறு சேதமடைந்த வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு இழப்பீடு வழங்க ரூ 96 கோடியே 92 லட்சம் ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

அதற்கான அரசாணையும் தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமின்றி வடகிழக்கு பருவமழை என்றும் இல்லாதவாறு இம்முறை 50% கூடுதலாகவே காணப்பட்டது.மேலும் 1.45 லட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட பயிர் மழையில் மூழ்கி நாசமானது.அதனை ஈடுகட்ட தமிழக அரசு மாநில நிவாரண நிதியிலிருந்து பேரிடர் நிவாரணம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் அலையில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தற்போது தான் நிவராண நிதி வழங்கும் நிலையில் அடுத்த புதிய வகை கொரோனா உருமாற்றம் அடைந்து அதிகளவு பரவி வருகிறது.