இனி இவர்களுக்கு எல்லாம் ரூ 8000! மத்திய அரசு வெளியிட்ட தகவல்!
கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.இந்த திட்டத்தின் மூலம் சொந்தமாக விவசாயம் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பத்திற்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ 2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு 6000 ரூபாயாக விவசாயிகளின் வாங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்த திட்டத்தின் மூலம் இணைந்த பயனாளிகளுக்கு 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது.கடந்த டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை உள்ள காலத்தில் 13 வது தவணை தொகை இந்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதிக்குள் வாங்கி கணக்கில் செலுத்தப்படும் அதற்கு அவர்கள் பி.எம் கிசான் திட்டத்தின் வலைதளத்தில் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அப்போது தான் இந்த மாத தவணை பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.இந்த பட்ஜெட் மீது விவசாயிகளுக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் விவசாயிகளுக்கு தற்போது பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 வழங்கப்பட்டு வரும் நிலையில் இனி 8000 ரூபாய் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அடுத்த மாதம் நடைபெறும் பட்ஜெட் தாக்கல் தொடரின் போது பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் ரூ 8000 வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.